Captain Miller Box Office Day 2 - கேப்டன் மில்லர் இரண்டாவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முந்தினம் வெளியானது. அயலானுக்கு போட்டியாக களமிறங்கிய படம் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றிருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியிருக்கும் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த நிலவரம் தெரியவந்திருக்கிறது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. திருச்சிற்றம்பலம் படம் கொடுத்த வெற்றி வைபை தனுஷ் தவறவிட்டுவிட்டாரே என்று சோகத்தில் இருந்தனர் அவரது ரசிகர்கள். இந்த சூழலில் ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் உள்ளிட்டோர் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

Here is the details about Captain Miller Box Office Day 2

பெரும் எதிர்பார்ப்பு: தியாகராஜ குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அருண் மாதேஸ்வரன். அவர் இதற்கு முன்னதாக இயக்கிய ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்கள் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையே பெற்றன. குறிப்பாக அவரது மேக்கிங்கில் தனித்துவம் தெரிந்ததாக ரசிகர்கள் கூறினர். இதனால் கேப்டன் மில்லர் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

பொங்கல் ரிலீஸ்: அந்த எதிர்பார்ப்போடு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேப்டன் மில்லர் திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. ஏற்கனவே ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்ததாலும்; ஆடியோ லான்ச்சில் படத்தில் பணியாற்றியவர்களின் பேச்சு எதிர்பார்ப்பை அதிகரித்திருந்ததாலும் ஆவலோடு படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றனர்.

நல்ல வரவேற்பு: படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்தனர். முக்கியமாக படத்தின் மேக்கிங்கிற்கும், கதைக்கும் நல்ல ரெஸ்பான்ஸை கொடுத்திருக்கும் ரசிகர்கள்; கோயில் நுழைவு போராட்டத்தை இணைத்த விதம் நல்ல விதமாக இருந்ததாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். மேலும் தனுஷின் நடிப்பு, சிவராஜ்குமாரின் நடிப்பு ஆகியவற்றையும் பாராட்டும் அவர்கள்; வாத்தியில் விட்டதை கேப்டன் மில்லரில் தனுஷ் பிடித்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துவருகிறார்கள்.

கேப்டன் மில்லர் வசூல்: படம் வெளியான முதல் நாள் 8.65 கோடி ரூபாய் வசூல் செய்தது. இது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய்வரை வசூலில் நெருங்கிவிட்டது. தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே கண்டிப்பாக வசூலில் கேப்டன் மில்லர் சம்பவம் செய்யும் என்றே பேசிவந்தனர்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த நிலவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி, 6.65 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. ஆகமொத்தம் கேப்டன் மில்லர் இரண்டு நாட்கள் முடிவில் 14லிருந்து 15 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது என்று கருதப்படுகிறது. இரண்டாவது நாள் வசூலை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன கேப்டன் மில்லர் லைட்டா சறுக்குன மாதிரி இருக்கே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X