Custody Collection - கஸ்டடி மூன்று நாள் வசூல்.. படக்குழு பெரிய அப்செட் - நிலைமை ரொம்ப மோசமா இருக்கே

சென்னை: Custody Collection (கஸ்டடி வசூல்) கஸ்டடி படம் வெளியாகி மூன்று நாள்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு முதல் படத்திலேயே தனது கேஷுவலான இயக்கத்தால் கவனம் ஈர்த்தார். அதன் பிறகு அவர் இயக்கிய சரோஜா மெகா ஹிட்டாக, கோவா சுமார் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஆனால் மங்காத்தா படத்துக்கு அடுத்து அவர் இயக்கிய எந்தப் படமும் ஹிட்டாகவில்லை.

Here Is The Details about Custody first 3 days box office report

கம்பேக் கொடுத்த சிம்பு, வெங்கட் பிரபு: நிலைமை இப்படி ஒரு வெற்றிக்காக அசுர பசியோடு காத்திருந்த சிம்புவோடு வெங்கட் பிரபு இணைந்தார். டைம் லூப் கான்செப்ட்டை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். கொஞ்சம் மிஸ் ஆனாலும் சொதப்பலாக அமைந்துவிடக்கூடிய ரிஸ்க்கான கதையை கையில் எடுத்து தனது மேஜிக்கான திரைக்கதை மூலம் படத்தை மெகா ஹிட்டாக்கினார் வெங்கட் பிரபு. படம் நூறு கோடி ரூபாயை வசூலித்து அசத்தியது.

கஸ்டடி: மாநாடு படத்துக்கு பிறகு நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகியிருக்கும் படம் நாக சைதன்யாவுக்கு முதல் நேரடி தமிழ் படமாகும். கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், ராம்கி, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படத்துக்கு இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்திருக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்போடு கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

Here Is The Details about Custody first 3 days box office report

கஸ்டடிக்கு வந்த கஷ்டம்: படம் நிச்சயம் பலத்த வரவேற்பைப் பெறும் என படக்குழு நினைத்திருந்தது. ஆனால் அவர்கள் தலையில் இடி விழுந்ததுபோல் விழுந்தது கஸ்டடி படத்துக்கான நெகட்டிவ் விமர்சனங்கள். அருமையான ஒன்லைனை சுவாரஸ்யமான திரைக்கதையில் படமாக்காமல் ரொம்பவே சுமாராக எடுத்து வைத்திருக்கிறார் என ரசிகர்கள் விமர்சித்தனர். அதுமட்டுமின்றி, இது தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்பதே தெரியவில்லை என்றும் கூறினர்.

வசூலில் டல்: இதன் காரணமாக கஸ்டடி படத்தின் முதல் நாள் வசூல் ரொம்பவே பாதிக்கப்பட்டது. அதன்படி முதல் நாளில் கஸ்டடி மூன்று கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இருப்பினும், சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாட்கள் என்பதால் நிச்சயம் கஸ்டடி படத்தின் வசூல் அதிகரித்து மகிழ்ச்சியை கொடுக்கும் வெங்கட் பிரபு & டீம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

Here Is The Details about Custody first 3 days box office report

மூன்று நாள் வசூல் நிலவரம்: இந்நிலையில் படம் வெளியாகி மூன்று நாள்கள் முடிவடைந்திருக்கும் சூழலில் வசூல் குறித்த தகவல் தெரியவந்திருக்கிறது. முதல் நாள் மூன்று கோடி ரூபாய் வசூலித்த கஸ்டடி இரண்டாம் நாளில் மூன்று கோடி ரூபாய் மூன்றாவது நாளில் 1.75 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறதாம்.

ஆகமொத்தம் மூன்று நாள்களில் படமானது 7லிருந்து 8 கோடி ரூபாய்வரை மட்டுமே வசூலித்திருக்கிறது. இந்தப் படத்துக்காக நாக சைதன்யாவுக்கு பத்து கோடி ரூபாய் சம்பளம் என தகவல் வெளியானது. ஆனால் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் அதனைக்கூட தொடவில்லை என்பது வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X