Dhanush - தனுஷ் போட்டிருக்கும் பக்கா ப்ளான்?.. பிசிறு தட்டாமல் அடித்தால் கோடியை அள்ளலாம்

சென்னை: Dhanush (தனுஷ்) தனுஷின் லைன் அப்பை பார்த்த ரசிகர்கள் பக்கா ப்ளான் போட்டு படு பிஸியாக இருக்கிறாரே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

வாத்தி படத்தின் தோல்விக்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே இயக்கியிருக்கிறார். ப்ரியங்கா அருள்மோகன், சிவராஜ்குமார், ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். நிச்சயம் கேப்டன் மில்லர் மீண்டும் தனுஷுக்கு வெற்றி முகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

 Here is the Details About Dhanush Next Movies Line up

தனுஷ் 50: கேப்டன் மில்லர் படத்துக்கு பிறகு தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்துக்கு செட் போடும் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது. இதில் அபர்ணா பாலமுரளி, அனிகா, சந்தீப் கிஷன்,காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு பிறகு சேகர் கம்முலா படத்தில் நடிக்க அவர் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தவிர்த்து எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். வடசென்னையை மையமாக வைத்து உருவாகப்போகும் படத்துக்காக வீடுகள் செட் போடும் பணி நடந்துவருகிறது. விரைவில் அனைத்து பணிகளும் முடிந்து ஷூட்டிங் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் அபர்ணா பாலமுரளி தனுஷுக்கு ஜோடி இல்லை சந்தீப் கிஷனுக்குத்தான் ஜோடி என கூறப்படுகிறது.

 Here is the Details About Dhanush Next Movies Line up

படுபிஸி: இந்தச் சூழலில் தனுஷின் லைன் அப்பை பார்க்கும்போது அவர் அடுத்த இன்னும் சில வருடங்களுக்கு படுபிஸியாக இருக்கப்போகிறார் என்பது தெரிகிறது. அதாவது, கேப்டன் மில்லரை முடித்திருக்கும் தனுஷ் அடுத்ததாக 50ஆவது படத்தில் நடிக்கிறார். அதனை முடித்துவிட்டு சேகர் கம்முல்லா இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு மொழியில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். அதனை முடிக்கும் தனுஷ் உடனடியாக ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிக்கிறார்.

இதோடு முடியவில்லை: அதோடு மட்டும் முடியவில்லை லிஸ்ட்டில் ஒன்று பாக்கி இருக்கிறது. ஆனந்த் எல். ராய் படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கிறார். அதனை அவரே தயாரிக்கவும் செய்கிறார். இதற்கிடையே இளையராஜாவின் பயோபிக்கிலும் அவர் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இப்படி வரிசையாக படங்களை வைத்திருக்கும் தனுஷ் அடுத்த சில வருடங்களுக்கு படுபிஸி. இவை அனைத்தும் பிசிறு தட்டாமல் நடந்தால் கோடிகளை அள்ளிவிடுவார் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X