Atlee Net Worth - ஐந்தே படங்கள்தான்.. 37 வயதில் அட்லீயின் சொத்து மதிப்பு இவ்வளவா?.. இதோ முழு விவரம்
சென்னை: Atlee Birthday (அட்லீ பிறந்தநாள்) தமிழைத் தொடர்ந்து ஹிந்தியில் கால் பதித்திருக்கும் அட்லீக்கு இன்று 37ஆவது பிறந்தநாள்
ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆர்யா, நயன் தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் 80 கோடி ரூபாய்வரை வசூலித்தது. முதல் படத்திலேயே அதுவும் காதல் ஜானரில் படம் எடுத்து பெரும் ஹிட்டாக்கியதால் உடனடியாக கவனம் பெற்றார் அட்லீ. ஆனாலும் அந்தப் படம் மௌன ராகம் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக் என்று விமர்சனத்தை சந்தித்தது.

அண்ணனுக்கு செய்த அட்லீ: ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட்டாக அடுத்ததும் விஜய்யுடன் இணைந்து மெர்சல் படத்தை இயக்கினார். அந்தப் படமும் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இப்படி வரிசையாக மூன்று படங்கள் மெகா ஹிட்டானதால் மீண்டும் விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது.
ஹிந்தியில் அட்லீ: தமிழில் மொத்தம் நான்கு படங்களை இயக்கிய அட்லீ தற்போது ஹிந்தியில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய அவர் பாலிவுட்டில் தனது தடத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இதுவரை அந்தப் படம் உலக அளவில் 880 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸுக்கு பிறகு தமிழிலிருந்து சென்று பாலிவுடில் சென்சேஷனல் இயக்குநராகியிருக்கிறார் அட்லீ.
தரமான மேக்கிங்: அட்லீ பிற படங்களிலிருந்து காப்பி அடித்துதான் தன்னுடைய படங்களை உருவாக்குகிறார் என்று ராஜா ராணியிலிருந்தே விமர்சனங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான ஜவான் படத்தில்கூட மொத்தம் 20க்கும் மேற்பட்ட படங்களை சொருகியிருக்கிறார் என்று கூறப்பட்டது. இருந்தாலும் வணிக ரீதியாக ஒரு படம் வெற்றி பெற என்னவெல்லாம் வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் அட்லீ. குறிப்பாக அவரின் மேக்கிங் தரம் வாய்ந்ததாக இருக்கும்.
அடுத்ததும் ஹிந்திதான்?: ஜவான் படத்தின் வெற்றி ஷாருக்கானின் மைண்ட் செட்டையே மாற்றியிருப்பதாக கூறுகிறார்கள். அடுத்த படத்தையும் அட்லீ இயக்கத்திலேயே நடிக்கலாம் என்ற மூடுக்கு அவர் வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி ஷாருக்கானை வைத்து அட்லீ அடுத்த படத்தை இயக்கினால் அதில் விஜய்யோ, கமல் ஹாசனோ நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதுமட்டுமின்றி விஜய்யையும், ஷாருக்கானையும் வைத்து ஒரு படம் இயக்குவேன் என்றும் அட்லீ உறுதியளித்திருக்கிறார்.
அட்லீயின் சொத்து மதிப்பு: இப்படி தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளின் சூப்பர் ஸ்டார்களின் குட் புக்கில் அட்லீ இருக்கிறார். ஐந்து படங்களில் அவரது வளர்ச்சியை பலரும் வியந்து பார்க்கிறார்கள். இந்த சூழலில் அவர் இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது பிகில் படம் தோல்வியடைந்தாலும் ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படத்துக்கு 25லிருந்து 30 கோடி ரூபாய்வரை சம்பளமாக அட்லீ பெற்றார் என்று கூறப்படுகிறது. அதேபோல் அட்லீயின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய்வரை இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி வேறு சில பிஸ்னெஸ்களையும் அவர் செய்துவருகிறாராம். அந்த பிஸ்னெஸ்களை மனைவி ப்ரியா கவனித்துவருவதாகவும் திரைத்துறையில் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











