Pa.Ranjith - பா.இரஞ்சித்தின் அடுத்த படம் இதுதான்.. பெண்களை வைத்து தரமான சம்பவம் காத்திருக்கு..
சென்னை: Pa.Ranjith Next Movie (பா.இரஞ்சித்தின் அடுத்த படம்) பா.இரஞ்சித் தயாரிக்கவிருக்கும் அடுத்த படம் கூறித்த அறிவிப்பு வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது
தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர் பா.இரஞ்சித். ஒடுக்கப்பட்டவர்களின் குரல் பெரிய அளவில் ஒலிக்காத தமிழ் சினிமாவில் இரஞ்சித் வந்த பிறகுதான் அந்தக் குரல் சத்தமாக கேட்க ஆரம்பித்தது. அவர் எடுக்கும் ஒவ்வொரு படமும் சமூகத்தில் ஏதோவொரு உரையாடலை தொடங்கிவைக்கும். அந்த அளவுக்கு அவரது படத்தின் கருப்பொருள் அமைந்திருக்கும் என்பது அவரது தனிச்சிறப்பு.

தங்கலான் இரஞ்சித்: பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனையடுத்து அவர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
தங்கலான் ரிலீஸ்: படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகளும் முடிவடையவிருக்கின்றன. அதனையடுத்து படத்தின் டீசர் இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் என கூற ஆரம்பித்திருக்கின்றனர். படமானது அடுத்த வருடம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கருக்கு தங்கலான்: இப்படம் கோலார் தங்க வயலில் தமிழர்கள் பட்ட கஷ்டத்தை பற்றி பேசும் கதைக்களத்தை கொண்டிருக்கிறது. மேலும் இதனை ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஒரு ஹிட்டுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் விக்ரமுக்கும் இந்தப் படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாக அமையும் எனவும்; நட்சத்திரம் நகர்கிறது படத்தில் வாங்கிய விமர்சனத்துக்கு இரஞ்சித்தும் இதில் பதிலடி கொடுப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
தயாரிப்பாளர்: இதற்கிடையே பா.இரஞ்சித் இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார். அதன்படி அவர், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். தனது இயக்கத்தில் எப்படி முக்கியமான விஷயத்தை இரஞ்சித் பேசுகிறாரோ அதேபோல்தான் தயாரிக்கும் படங்களிலும் பேசிவருகிறார்.
அடுத்த படம்: இந்நிலையில் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் அடுத்ததாக ஆந்தாலஜி ஒன்றை இயக்கப்போகிறார். அதற்கு, கள்ளிப்பாலில் ஒரு டீ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நான்கு கதைகளை கொண்ட அந்தப் படத்தை அபிஷா, சினேகா பெல்சின் (இப்போது உயிருடன் இல்லை), கனிஷ்கா, சிவரஞ்சனி என நான்கு பெண்கள் இயக்கியிருக்கின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் படத்தின் பெயரே கதை சொல்கிறது. கண்டிப்பாக இதிலும் ஒரு சமூகத்துக்கு தேவையான கருத்து இருக்கும் என கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











