Fahadh Faasil - ஃபகத் பாசிலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. இதோ முழு தகவல்
திருவனந்தபுரம்: Fahadh Faasil Net Worth (ஃபகத் பாசில் சொத்து மதிப்பு) நடிகர் ஃபகத் பாசிலின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பேமஸான இயக்குனர் பாசில் அவரது மகன் பகத் பாஸில் அவர் தற்போது இந்திய அளவில் பேமஸான நடிகராக இருக்கிறார் படத்தின் மூலம் அறிமுகமான அவருக்கு ஆரம்பத்தில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை இருந்தாலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார் இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்

கண்களால் நடிப்பு: கண்களால் நடிக்கும் ஹீரோக்கள் குறைந்து வரும் நேரத்தில் ஃபகத் பாசிலோ அதனை மிகத் திறமையாக கையாண்டு வருகிறார் எனவே அவரது நடிப்பை விட அவரது கண்களுக்கு என்று ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அலட்டல் இல்லாத நடிப்பு அவரது டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார் இதன் காரணமாக மலையாள மட்டும் இன்றி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்
மாமன்னன்: சமீபத்தில் அவர் நடித்த மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் படத்தை இயக்கியிருந்தார். அதில் அவர் ரத்தினவேல் என்ற சாதி வெறி பிடித்த கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் ஃபகத் பாசில். வில்லன் என்றாலே கத்தி பேச வேண்டும்; கத்தியால் வெட்ட வேண்டும் போன்ற டெம்ப்ளேட்டுகளை அசால்ட்டாக உடைத்து தனது மிரட்டலான நடிப்பில் எல்லோரையும் கவர்ந்து விட்டார்.
உச்சக்கட்ட ட்ரெண்டிங்: இதற்கு முன்னதாக தமிழில் அவர் வேலைக்காரன், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அந்தப் படங்களில் நடித்தபோதே அவர் பிரபலம்தான். ஆனாலும் மாமன்னன் படம் தமிழில் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்க்டொஉத்துவிட்டது. குறிப்பாக அந்தப் படம் ஓடிடியில் வெளியான பிறகு சமூக வலைதளங்கள் முழுக்க ஃபகத் பாசிலே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நஸ்ரியாவுடன் திருமணம்: சிறந்த நடிகை என்று பெயர் எடுத்த நஸ்ரியா நசீமை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரது திருமண வாழ்க்கையும் சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது மேலும் நஸ்ரியாவும் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு: இந்நிலையில் ஃபகத் பாசில் இன்று தனது 41ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இப்படிப்பட்ட சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தமாக 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











