Jailer - ஜெயிலர் படத்தில் ஜாக்கி ஷெராஃப் சம்பளம்.. ஜேசிபி ஓட்டியதற்கா இவ்வளவு?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: Jackie Shroff Salary (ஜாக்கி ஷெராஃப் சம்பளம்) ஜெயிலர் படத்திற்காக ஜாக்கி ஷெராஃப் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இரண்டு வருடங்கள் கழித்து ரஜினிகாந்த்தை திரையில் பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு சென்றனர். படமும் அட்டகாசமாக இருந்ததால் அடுத்தடுத்த காட்சிகளில் படத்திற்கு கூட்டம் கூட ஆரம்பித்தது. இதன் காரணமாக வசூலிலும் முதல் நாளே ஜெயிலர் சாதனை படைத்தது.

வசூல் சாதனை: முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 49 கோடி ரூபாயை வசூலித்து பிற படங்களின் சாதனையை அடித்து நொறுக்கியது ஜெயிலர். தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களால் இரண்டாவது நாளிலேயே உலக அளவில் நூறு கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இந்தச் சூழலில் படமானது இதுவரை உலகளவில் 375 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.
பான் இந்தியா ஸ்டார்கள்: இதற்கிடையே இந்தப் படத்தில் பணியாற்றிய பான் இந்தியா ஸ்டார்களான மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் நடித்திருந்தனர்.. அவர்களுக்கு சரியான ஸ்க்ரீன் ஸ்பேஸை நெல்சன் திலீப்குமார் வழங்கியிருக்கிறார் என படம் பார்த்தவர்கள் கூறினர். குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸில் அவர்களை நெல்சன் திலீப்குமார் சரியாக பயன்படுத்திவிட்டார் என்று பலர் தெரிவிக்கின்றனர்.

விமர்சனம்: அதேசமயம் படத்தில் சிவராஜ்குமாருக்கும், மோகன் லாலுக்கும் இருந்த முக்கியத்துவம் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான ஜாக்கி ஷெராஃப்புக்கு இல்லை. வெறும் ஜேசிபி ஆபரேட்டராக மட்டுமே அவரை நெல்சன் திலீப்குமார் பயன்படுத்திவிட்டார். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் தங்களது ஆதங்கத்தையும் அவ்வப்போது வெளிபடுத்திவருகின்றனர்.
சம்பளம் எவ்வளவு: இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக ஜாக்கி ஷெராஃப் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் ஜெயிலரில் நடிக்க மூன்று முதல் நான்கு கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்றார் என கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், ஜெயிலர் படத்தில் ஜேசிபி ஓட்டியதற்காகவா ஜாக்கிக்கு 4 கோடி ரூபாய்வரை சம்பளம் கொடுத்தார்கள் என்று கிண்டல் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











