Jailer - நெல்சனை வைத்து கமுக்கமாக காரியம் சாதித்த சிவகார்த்திகேயன் - இது புது ஜெயிலர் கதையா இருக்கே

சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படத்தில் நெல்சன் திலீப்குமாரை வைத்து சிவகார்த்திகேயன் காரியம் சாதித்திருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வியை மட்டுமின்றி நெல்சன் திலீப்குமாரை பலர் கடுமையாக ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். பீஸ்ட் படத்தை நெல்சன் எடுத்துக்கொண்டிருந்தபோதே சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். அதில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

Here is the details about jailer movie story

ஜெயிலர்: அதன்படி படத்துக்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பீஸ்ட் சந்தித்த தோல்வியால் நெல்சனை படத்திலிருந்து தூக்கலாம் என பேச்சு எழுந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் ஜெயிலருக்கு நெல்சனே இயக்குநராக இறுதி செய்யப்பட்டார். முந்தைய படம் கொடுத்த தோல்வியாக துவண்டு போயிருந்த நெல்சன் ஜெயிலர் படத்தை வைத்து தன்னை மீண்டும் நிரூபிக்க காத்திருக்கிறார்.

ரஜினிக்கும் முக்கியமான படம்: நெல்சன் திலீப்குமாருக்கு மட்டுமின்றி ரஜினிகாந்த்துக்கும் ஜெயிலர் முக்கியமான படமாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னதாக அவர் நடித்த தர்பார், அண்ணாத்த படங்கள் தோல்வியை சந்தித்திருக்கிறது. தொடர்ச்சியாக இரண்டு படங்கள் கொடுத்த தோல்வியால் ரஜினியின் சம்பளமும் கணிசமாக குறைக்கப்பட்டிருப்பதாக பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே ஜெயிலரை மெகா ஹிட்டாக்கி மிண்டும் ஃபார்முக்கு திரும்ப காத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

ஜெயிலர் கதை என்ன?: மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனையொட்டி க்ளிம்ப்ஸ் வீடியோவை கடந்த வாரம் வெளியிட்டது படக்குழு. இதற்கிடையே ஜெயிலர் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று ஏற்கனவே வெளியானது. அதன்படி, படமானது ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது என கூறப்பட்டது.

Here is the details about jailer movie story

ஜெயிலரின் புது கதை: இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கதை குறித்து புதிய தகவல் ஒன்று பரவிவருகிறது. அதாவது, சிவகார்த்திகேயனின் தந்தையான தாஸ் ஜெயிலராக பணியாற்றியவர். மிகவும் நேர்மையான அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். இப்படிப்பட்ட சூழலில் தாஸின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்துதான் ஜெயிலர் கதையை நெல்சன் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தகவலை அறிந்த ரசிகர்கள் தனது நீண்ட கால நண்பரான நெல்சனை வைத்து சிவகார்த்திகேயன் காரியம் சாதித்துவிட்டதாக கமெண்ட்ஸ்ட் செய்துவருகின்றனர்.

எப்படி இருக்கிறது ஜெயிலர்?: முன்னதாக, படத்தின் ஷூட்டிங் பெருமபாலும் முடிவடைந்துவிட்டது. அதுவரை படத்தை பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினரும், ரஜினிகாந்த்தும் ரொம்பவே ஹேப்பியாக இருக்கிறார்களாம். இந்தப் படம் நிச்சயம் மெகா ஹிட்டாகும் என்றும் அவர்கள் கணித்துள்ளனராம், இதனையடுத்து அடுத்த படத்துக்கு ரஜினியின் சம்பளத்தை கணிசமாக உயர்த்துவதற்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X