Japan Box Office - சப்பையான ஜப்பான் பாக்ஸ் ஆபிஸ்.. நான்காவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: Japan Box Office (ஜப்பான் பாக்ஸ் ஆஃபிஸ்) கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ஜப்பான். இந்தப் படம் அவருக்கு 25ஆவது படமாக உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் கார்த்தி, அனு இம்மானுவேல், விஜய் மில்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கோலிவுட்டில் கவனம் பெற்ற இயக்குநர்களில் ஒருவரான ராஜுமுருகன் இயக்கம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தே இருந்தது.

Here is the details about Japan 4th Day Box Office Collection

படம் ரிலீஸ்: அந்த எதிர்பார்ப்போடு படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ராஜுமுருகன் இயக்கம், கார்த்தி ஹீரோ என்பதால் ஆர்வத்துடன் படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். ஆனால் படமோ ரசிகர்களை திருப்திப்படுத்த தவறிவிட்டது. குறிப்பாக மேக்கிங், திரைக்கதை என பல விஷயங்கள் படத்தில் நன்றாக இல்லை என ரசிகர்கள் ஓபனாகவே கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

விஜய் ரசிகர்கள்: அதிலும் விஜய் ரசிகர்கள் ஜப்பான் படத்தை அதிகம் கலாய்த்துவருகின்றனர். படம் நன்றாக இல்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும் படத்தில் விஜய்யை கலாய்க்கும்படியான ஒரு காட்சி வந்ததும் அவர்களை அப்செட்டாக்கியிருப்பது சமூக வலைதளங்களின் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது. அதாவது படத்துக்குள் ஜப்பான் (கார்த்தி) எடுக்கும் ஒரு படத்தில், இந்தப் பாடலை பாடியது என்ற வாசகம் இடம்பெறுகிறது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் இது விஜய்யை கலாய்க்கும் தொனியில் இருப்பதாக கூறிவருகின்றனர்.

நெகட்டிவ் விமர்சனங்கள்: படம் வெளியான முதல் நாளிலிருந்தே படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. முக்கியமாக ஜப்பானுக்கு போட்டியாக களமிறங்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் சக்கைப்போடு போடுவதால் ஜப்பான் இந்த தீபாவளி ரேஸில் சப்பையாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

வசூல் நிலவரம்: முதல் நாளில் 4.15 கோடி ரூபாய் வசூலித்த ஜப்பான் அடுத்தடுத்த நாட்களில் கடுமையான ட்ரோல்களையும் விமர்சனங்களையும் சந்தித்ததால் வசூலில் பின் தங்கியது. அதன்படி இரண்டாவது நாளில் மூன்று கோடி ரூபாயும், மூன்றாவது நாளில் 4 கோடி ரூபாயும் என உலகம் முழுவதும் முதல் மூன்று நாட்களில் 11 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது.

நான்காவது நாள் வசூல்: இந்நிலையில் ஜப்பான் படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த நிலவரம் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்திலிருந்து வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது நேற்று ஒரு கோடி ரூபாய்வரை மட்டுமே வசூலித்திருக்கிறது என கூறப்படுகிறது. எனவே ஜப்பான் படம் முதல் நான்கு நாட்களில் மொத்தமே 12 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறது. இதனை கேள்விப்பட்ட கார்த்தி ரசிகர்கள் இந்தப் படம் 20 கோடி ரூபாயையாவது தொடுமா என்ற கவலை நிலைக்கு சென்றிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X