கார்த்திக்கு 25ஆவது படம் இப்படியா போகணும்?.. ஜப்பான் அவ்வளவுதானா?.. வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: Japan Box Office (ஜப்பான் பாக்ஸ் ஆபிஸ்) ஜப்பான் படம் வெளியாகி 6ஆவது நாளில் அதன் வசூல் படு மோசமாக இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கார்த்தி திறமையான நடிகர்களில் ஒருவர். அறிமுகமான முதல் படமான பருத்திவீரனிலேயே அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து அவர் படங்களில் பெரும்பாலானவைகள் கார்த்தியின் திறமையை ரசிகர்களுக்கு பறைசாற்றும் விதமாகவே அமைந்தன.

ஜப்பான்: இந்த சூழலில் அவர் தனது 25ஆவது படமாக ஜப்பான் படத்தில் நடித்தார். ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
புஸ்வானம் ஆன ஜப்பான்: ராஜுமுருகனும் கார்த்தியும் முதன்முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்து ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றனர். ஆனால் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஜப்பான் படம் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகவில்லை. இதனால் ரசிகர்களும் சீட்டில் நெளிய ஆரம்பித்தனர். முக்கியமாக ராஜுமுருகனின் மேக்கிங் துளிக்கூட சரியில்லை என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தனர்.
வசூல் நிலவரம்: படத்தின் மீது இருந்த அதிக எதிர்பார்ப்பால் முதல் நாளில் மட்டும் ஜப்பான் டீசண்ட்டான வசூலை (4 கோடி ரூபாய்) செய்தது. ஆனால் முதல் நாள் முடிவில் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் விழுந்துவிட்டன. எனவே அடுத்த நாட்களில் படத்தின் வசூல் படுத்தேவிட்டது. அதன்படி ஐந்து நாட்கள் முடிவில் மொத்தமே 13 கோடி ரூபாய்வரைதான் வசூலித்ததாக கூறப்பட்டது.
ஆறாவது நாள் வசூல்: இந்நிலையில் ஆறாவது நாளான நேற்று படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நேற்று 90 லட்சம் ரூபாய்வரைதான் படத்தின் வசூல் இருந்ததாகவும் இதன் காரணமாக மொத்தமாக இதுவரை 13 கோடியே 90 லட்சம் ரூபாய்வரைதான் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீபாவளி விடுமுறை முடிந்து அனைவரும் தங்களது பணிகளுக்கு சென்றுவிட்டதால் ஏற்கனவே டல்லடித்துக்கொண்டிருந்த ஜப்பான் வசூல் இப்போது அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இனியும் எழுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதல் விரைவில் ஜப்பான் படம் திரையரங்குகளிலிருந்து தூக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இதை கேள்விப்பட்ட கார்த்தியின் ரசிகர்கள் 25ஆவது படம் இப்படியா போகணும் என கவலையடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











