Jigarthanda 2 Box Office - தீபாவளி வின்னர்.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல் விவரம் உள்ளே..

சென்னை: Jigarthanda Double X (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்) ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஆறாவது நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் கார்திக் சுப்புராஜ். கதைக்கள, திரைக்கதை அமைத்தல், மேக்கிங் என அனைத்திலும் தனக்கென தனி ஸ்டைலை ஃபாலோ செய்யும் அவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

 Here is the details about Jigarthanda Double X 6th Day Box Office Collection

மாஸ் ரெஸ்பான்ஸ்ஸ்: இப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி ரிலீஸானது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸுக்கு போட்டியாக ஜப்பான் களமிறங்கியதால் அந்தப் படத்தின் மீதுதான் பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கார்த்திக் சுப்புராஜோ தனது மேக்கிங்கில் சைலெண்ட் சம்பவத்தை செய்துவிட்டார். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் சிலாகிக்கின்றனர்.

பழங்குடி கனெக்ட்: கறுப்பான உருவம் கொண்ட ஒருவர் ஹீரோ ஆகிறார் என்ற ஒன்லைனை வைத்துக்கொண்டு அதில் தனது தனித்துவ ஸ்டைல் ஆஃப் மேக்கிங்கை புகுத்தி பழங்குடி பிரச்னையை கனெக்ட் செய்த விதத்தில் அப்ளாஸை அள்ளிவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். இப்படிப்பட்ட ஒரு ஜானரில் கார்த்திக் சுப்புராஜ் அப்படி செய்ததன் மூலம் புதிய டெம்ப்ளேட்டை அவர் உருவாக்கியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறுகின்றனர்.

குவியும் பாராட்டு: ஜிகர்தண்டா 2 படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் பாராட்டு தெரிவிக்கின்றனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பாராட்டி நீண்ட அறிக்கை வெளியிட்டார். பிறகு படக்குழுவை அழைத்து நேரில் சந்தித்தும் தனது பாராட்டை கூறினார். தமிழ்நாடு முழுவதுமே படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.

வசூலிலும் சூப்பர்: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.முதல் நாளில் மட்டும் டல்லடித்த வசூல் அடுத்தடுத்த நாட்களில் பிக்கப் ஆனது. ஐந்து நாட்கள் முடிவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 22 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இது ஜப்பான் படத்தைவிட பத்து கோடி ரூபாய் அதிகம் ஆகும்.

தொடரும் வசூல்: இந்நிலையில் ஆறாவது நாளான நேற்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தீபாவளி விடுமுறை முடிந்து பலரும் பணிகளுக்கு சென்றுவிட்டாலும் படத்துக்கு ஓரளவுக்கு கூட்டம் வந்ததால் 1.52 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது எனவும் மொத்தம் இதுவரை 24 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தை பற்றிய பேச்சு இன்னும் ஓயவில்லை என்பதால் இந்த வார இறுதியில் கூட்டம் அதிக அளவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X