Jigarthanda Double X Box Office - தித்திக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. வசூலில் பட்டையை கெளப்புது..
சென்னை: Jigarthanda Double X Box Office (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாக்ஸ் ஆபிஸ்) ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
பீட்சா படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் தனது முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான மேக்கிங், திரைக்கதை மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குநராக அடையாளப்படுத்திக்கொண்டார். அதனையடுத்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. மதுரை ரவுடியிசத்தை கதைக்களமாக கொண்டு அதை தன்னுடைய ஸ்டைலில் ப்ரெசண்ட் செய்தது ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

ஜிகர்தண்ட 2: இந்த சூழலில் அவர் தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தின் முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது.
செம மாஸ்: படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி ரிலீஸானது. இந்தப் படத்தோடு கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படமும் போட்டியாக களமிறங்கியது. நிச்சயம் இந்த தீபாவளிக்கு ஜப்பான் வெல்லும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது. ஆனால் ஸ்வீட் சர்ப்ரைஸாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பந்தயம் அடித்திருக்கிறது.
அட்டகாச மேக்கிங்: படத்தை பார்த்த ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தில் அதகளம் செய்துவிட்டார். பீரியட் ஜானரில் படத்தை உருவாக்கி அதை தனித்துவமாக ப்ரெசண்ட் செய்திருக்கிறார். திரைக்கதை, மேக்கிங், நடிகர்களின் நடிப்பு என எதிலும் குறை சொல்ல முடியாது. முக்கியமாக பழங்குடி இனத்தை இதில் கனெக்ட் செய்த விதம் ரொம்பவே ரசிக்கும்படி இருந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
வசூல்: இப்படி படத்துக்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. இதனால் தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வசூலிலும் மாஸ் காட்டுகிறது ஜிகர்தண்டா 2. அதன்படி முதல் நாளில் வசூலில் 2.5 கோடி ரூபாய் வசூலித்து டல் அடித்தாலும் இரண்டாவது நாளில் 4.86 கோடி ரூபாயும் மூன்றாவது நாளில் 7. 2 கோடி ரூபாயும் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.
இதன் காரணமாக மூன்று நாட்கள் முடிவில் ஜிகர்தண்டா 2 மொத்தம் 14 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நேற்று மட்டும் படமானது 4 கோடி ரூபாயிலிருந்து ஐந்து கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் இதனால் மொத்தமாக இதுவரை 19 கோடி ரூபாய்வரை ஜிகர்தண்டா 2 வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் போட்டியாக களமிறங்கிய ஜப்பான் படம் நான்கு நாட்கள் முடிவில் 12 கோடி ரூபாய்தான் வசூலித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த தீபாவளியில் கார்த்திக் சுப்புராஜ் வின்னராகிவிட்டார் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











