Antony Box Office - பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ஆண்டனி.. மாஸ் காட்டிய ஜோஜு ஜார்ஜ்..

சென்னை: Antony Box Office (ஆண்டனி பாக்ஸ் ஆபிஸ்) ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான ஆண்டனி படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது.

ஜோஜு ஜார்ஜை வைத்து ஆண்டனி படத்தை இயக்கியிருக்கிறார் ஜோஷி. ராஜேஷ் வர்மா கதை எழுத சாக் பால் தயாரித்திருக்கிறார். படம் பார்த்த ரசிகர்கள் இது ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை தருகிறது என்கின்றனர்.. அதிரடி ஆக்‌ஷனையும் உணர்ச்சிகரமான காட்சிகளையும் காண்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர்.

Here is the details about Joju Georges Antony Movie Box Office Report

நடிகர்கள்: ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்ஷன், செம்பன் வினோத் ஜோஸ், ஆஷா சரத், நைலா உஷா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஆண்டனி' மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் கடந்த ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.

இரத்த உறவுகளைவிட ஆழமான தொடர்பைக் கொண்டிருக்கும் உறவுகளை பற்றி இந்தப் படம் பேசுகிறது. ரெனதிவ் ஒளிப்பதிவு செய்ய; ஜேக்ஸ் பிஜோயின் இசையமைத்திருக்கிறார். மேலும், ட்ரீம் பிக் ஃபிலிம்ஸ் படத்தின் விநியோகிக்க, சிபி ஜோஸ் சாலிசேரி தலைமை இணை இயக்குநராக பணியாற்றி உள்ளார், அதே நேரத்தில் ராஜசேகர் சண்டை காட்சிகளை இயக்கி உள்ளார்.

வெற்றி: படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸை கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக ஆக்‌ஷன் காட்சிகளை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். இந்த சூழலில் ஆண்டனி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் கொடுத்து தெரியவந்திருக்கிறது. அதன்படி படத்துக்கு வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாகவும் கேரள திரையுலகில் பேச்சு எழுந்துள்ளது.

எவ்வளவு வசூல்: அதாவது படம் வெளியாகி நான்கு நாட்கள் முடிவடைந்துள்ளன. அதன்படி இதுவரை 6 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X