Kamal haasan 233 - கமல் - ஹெச்.வினோத் இணையும் படத்தின் கதை இதுவா?.. புதுசா இருக்கே

சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) கமல் ஹாசனும், ஹெச். வினோத்தும் இணையும் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து அதை மிக நேர்த்தியாக படமாக்கினார். படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சியமைப்பும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முதல் படத்திலேயே தான் எவ்வளவு தேர்ந்த இயக்குநர் என்பதை அவர் நிரூபித்துவிட்டதால் அவரது படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது.

Here is the details about Kamal haasan 233th Movie Story line

தீரன்: அந்தப் படத்துக்குப் பிறகு கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேசமயம் காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்வதையும், காவல் துறையையும் வினோத் ரொம்பவே புகழ்ந்திருக்கிறார் என்ற சர்ச்சையும் எழுந்தது. அதை காலப்போக்கில் அவரும் புரிந்துகொண்டு இனி இவ்வாறு படம் செய்ய மாட்டேன் என்றும் கூறினார்.

அஜித்துடன் கூட்டணி: முதல் இரண்டு படங்கள் மெகா ஹிட்டானதையடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது வினோத்துக்கு. ஆனால் அஜித்துடன் இணைந்த முதல் படம் தனது சொந்த கதையாக இல்லாமல் பிங்க் படத்தை ரீமேக் செய்தார் வினோத். அப்படி ரீமேக் செய்யப்பட்ட நேர்கொண்ட பார்வை படம் கலவையான விமர்சனங்களை பெற அடுத்ததாக வலிமை படத்தை இயக்கினார். அந்தப் படம் கதை ரீதியாக வரவேற்பை பெற்றாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் இயக்கிய துணிவு படம் ஹிட்டானது.

கமல் - ஹெச்.வினோத்: துணிவு படத்தை முடித்த பிறகு வினோத் யாரை இயக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்தது. அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக கமல் ஹாசனுடன் அவர் இணையவிருக்கிறார் என்ற தகவல் பரவியது. அது ஏறத்தாழ உறுதியும் செய்யப்பட்டுவிட்டதாகவும்; படத்தின் கதை கமலுக்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அதேசமயம் பிக்பாஸ் சீசன் 7ஐ கமல் தொகுத்து வழங்குவதால் இதில் நடிக்க தாமதமாகலாம் என கூறப்பட்டது. ஆனால் அந்தத் தகவலில் உண்மை இல்லை என திரைத்துறையினர் உறுதிபட கூறினர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதுதொடர்பான வீடியோ கமல் ஹாசன் கையில் தீப்பந்தத்துடன் இருந்தார். மேலும் Rise to Rule என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

என்ன கதை?: இந்நிலையில் ஹெச்.வினோத்தும், கமல் ஹாசனும் இணையும் படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி பாரம்பரிய நெல் விதைகள் அழிந்ததற்கான காரணமும் அதற்கு பின் இருக்கும் அரசியலையும்தான் ஹெச்.வினோத்தும், கமலும் இந்தப் படத்தில் பேசப்போகிறார்கள் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். வினொத்தின் படங்களில் எப்போதுமே ஒரு சமூக அக்கறை இருக்கும். அதனை இப்படத்தில் கமல் ஹாசனை வைத்து வெளிக்காட்டப்போவதால் படம் வீரியமாக இருக்கும் என கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X