Leo Update - லியோ படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?.. காப்பாற்றிவிடுவாரா லோகேஷ் கனகராஜ்?
சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லியோ படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது கட்டாயமாக அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. லியோ படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சஞ்சய் தத்தான் படத்தில் முக்கியமான வில்லன் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜுலை மாதம் அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது.
அப்டேட் சரவெடி: லியோ படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் படத்தின் அப்டேட்டுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி தெலுங்கு, கன்னடம் போஸ்டர்கள் வெளியாகின.நேற்று தமிழ் போஸ்டர் வெளியானது. அதில் சஞ்சய் தத் கழுத்தை ஆக்ரோஷமாக விஜய் பிடிப்பது போன்று இருந்தது. வரிசையாக வெளியாகும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
ஆடியோ வெளியீட்டு விழா: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை ரொம்பவே எதிர்பார்த்திருக்கின்றனர் ரசிகர்கள். ஏனெனில் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி குட்டி கதை ஒன்றை கூறினார். அதை சிலர் விஜய்க்கு எதிராக ரஜினி பேசிவிட்டார் என்றனர். எனவே அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய்யும் குட்டி கதை சொல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது தளபதி ரசிகர்களிடம்.
ரன்னிங் டைம்: இந்நிலையில் லியோ படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது இரண்டு மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் என கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இரண்டரை மணி நேரம் படமா என கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். அதேசமயம் லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில் மேஜிக் செய்பவர். எனவே படம் ஓடுவதே தெரியாது. அதற்கு உதாரணம் விக்ரம் படம்.
அந்தப் படமும் இரண்டு மணி நேரம் 54 நிமிடங்கள் ஓடும். ஆனால் லோகேஷ் கனகராஜ் தனது திரைக்கதையால் அவ்வளவு மணி நேரமும் ரசிகர்களுக்கு சலிப்பை கொடுக்கவில்லை. எனவே அதே நிலைதான் லியோவிலும் இருக்கும் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











