Leo Story - லியோ கதை என்ன தெரியுமா?.. தெரிந்துகொள்ள இதை படிங்க..!

சென்னை: Leo Story (லியோ கதை) லியோ படத்தின் கதை இதுதான் என இணையத்தில் தகவல் ஒன்று தீயாக பரவிவருகிறது.

பீஸ்ட், வாரிசு படங்களுக்கு பிறகு மிகப்பெரிய நம்பிக்கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். ஏற்கனவே மாஸ்டரில் இணைந்த இந்தக் கூட்டணி மெகா ஹிட்டை கொடுத்தது. எனவே வரிசையாக இரண்டு படங்களில் சொதப்பிய விஜய்யை லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் மூலம் காப்பாற்றுவார் என்ற ஆவல் தளபதி ரசிகர்களிடையே ரொம்பவே எழுந்திருக்கிறது.

Here is the details about Leo Movie Story

பெரும் நட்சத்திர பட்டாளம்: லலித் தயாரிக்கும் லியோ படத்துக்கு மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட் என கூறப்படுகிறது. படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் என பெரும் நட்சத்திர பட்டாளமே இறங்கியுள்ளது. படமும் பான் இந்தியா படமாக அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

மெர்சல் செய்த ஃபர்ஸ்ட் லுக்: விஜய்யின் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் 22ஆம் தேதி லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகின. ஃபர்ஸ்ட் சிங்கிளான நா ரெடி பாடல் விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற; ஃபர்ஸ்ட் லுக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த போஸ்டரில் கையில் சுத்தியலுட்ன் ரத்தம் தெறிக்க தெறிக்க விஜய் இருந்தார். இதனால் படம் ஆக்‌ஷன் கதைதான் என்பது உறுதியானது.

Here is the details about Leo Movie Story

என்ன கதை: இந்தச் சூழலில் லியோ படத்தின் கதை இதுதான் என இணையத்தில் தகவல் ஒன்று பரவிவருகிறது. அதாவது, காஷ்மீரில் பேக்கரி மற்றும் காபி ஷாப் ஒன்றை விஜய் வைத்து தனது மனைவி மற்றும் மகளுடன் விஜய் நிம்மதியாக வாழ்ந்துவருகிறார். விஜய்யும், த்ரிஷாவும் கணவன் மனைவியாக படத்தில் நடித்திருக்கிறார்கள். விஜய்க்கு படத்தில் பெயர் பார்த்திபன். அப்போது ஒரு பெரிய மாஃபியா கேங்கால் பிரச்னை ஏற்படுகிறது. அவர்களுடன் விஜய் மோதும்படி சூழல் உருவாகி மோதலும் நடக்கிறது.

முன்னாள் எதிரிகள்: இதற்கிடையே விஜய்க்கும் ஏற்கனவே ஒரு கேங்குக்கும் பிரச்னை இருக்கும். அவர்களிடமிருந்து தனது அடையாளத்தை மறைத்துதான் காபி ஷாப் வைத்திருப்பார். ஆனால் தற்போது ஏற்பட்டிர்க்கும் புதிய பிரச்னையால் விஜய்யின் இருப்பிடம் அவரின் முன்னாள் எதிரிகளுக்கும் தெரியவரும். அப்போது ஃபிளாஷ்பேக் ஒன்று செல்லும். அதனைத் தொடர்ந்து இரண்டு கேங்குகளையும் விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை என்ற தகவல்தான் இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

முடிந்த ஷூட்டிங்: காஷ்மிரில் தொடங்கிய ஷூட்டிங் சென்னை மற்றும் திருப்பதியில் நடந்தது. சமீபத்தில்தான் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் விஜய் டப்பிங்கையும் இன்னும் சில நாட்களில் முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் நடக்கலாம் என்றும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X