Vijay Birthday - விஜய் பிறந்தநாள்.. லியோ அப்டேட் க்ளிம்ப்ஸ் இல்லையாம்.. வேறு என்ன தெரியுமா?

சென்னை: Vijay Birthday (விஜய் பிறந்தநாள்) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்திலிருந்து வெளியாகவிருக்கும் அப்டேட் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

விஜய் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் கடைசியாக வாரிசு படத்தில் நடித்தார். குடும்ப செண்ட்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகி பலத்த எதிர்பார்ப்புடன் படம் வெளியானது. ஆனால் படம் சீரியல் போல இருப்பதாக ரசிகர்கள் குறை சொன்னார்கள். இதன் காரணமாக படத்துக்கு எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.அதேசமயம் வசூலில் 300 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்தது. ஆனால் விஜய்க்கு படத்தின் ரிசல்ட் அப்செட்தான்.

Here is the details about Leo Update for Vijay birthday

லியோ: பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசுக்கு கிடைத்த அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய்க்கு மாஸ்டர் பீஸ் கொடுத்த லோகேஷ் மீண்டும் அவருடன் இணைந்திருப்பதால் படம் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் அறிவிப்போது வெளியான க்ளிம்ப்ஸும் உணர்த்தியது.

லியோ ஷூட்டிங்: லியோவின் ஷூட்டிங் முதல் ஷெட்யூலாக காஷ்மீரில் நடந்தது. இரண்டு மாதங்கள் கடுங்குளிரில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு பிரசாத் ஸ்டூடியோவில் ஷூட்டிங்கை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பையனூரில் ஷூட்டிங் முடிந்தது. இப்போது ஆதித்யராம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடக்கிறது. 2000 டான்ஸ்கர்கள் பங்கேற்ற பாடல் காட்சி சமீபத்தில்தான் முடிவடைந்தது.

இறுதிக்கட்ட ஷூட்டிங்: பல நாட்கள் ரிகர்சலுக்கு பிறகு கடந்த 11ஆம் தேதியுடன் பாடலுக்கான ஷூட்டிங் முடிந்திருக்கிறது. இதனையடுத்து 12,13 ஆகிய தேதிகளில் விஜய் ஷூட்டிங்கிலிருந்து பிரேக் எடுத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் ஷூட்டிங்கில் விஜய் கலந்துகொண்டதாக தெரிகிறது. இந்த ஷெட்யூல்தான் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் எனவும் சில நாட்களில் முடிந்துவிடும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் பிறந்தநாள்: இந்தச் சூழலில் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருகிறது. இதனையொட்டி அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவருகின்றனர்.மறுபக்கம் லியோ படக்குழுவும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த ரெடியாகியுள்ளதாம். அதாவது அன்றைய தினம் லியோ படத்திலிருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாகும் என படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

என்ன அப்டேட்: முதலில் படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் அது வதந்தி எனவும் படத்தின் போஸ்டர்தான் அன்றைய தினம் வெளியாகும் என்று பின்னர் தகவல் வெளியானது. ஆனால் அந்த இரண்டு தகவல்களுமே வெறும் தகவல்தான். விஜய் பிறந்தநாள் அன்று படத்திலிருந்து ஒரு சிங்கிள் டிராக் வெளியாவதற்கு வாய்ப்புகள் அதிகம் என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருக்கிறது. இந்தத் தகவல் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X