Lokesh Kanagaraj - ரஜினி 171.. லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளத்தை பாருங்க?.. இவர்தான் நம்பர் 1 போல
சென்னை: Lokesh Kanagaraj Salary (லோகேஷ் கனகராஜ் சம்பளம்) ரஜினி 171 படத்துக்காக லோகேஷ் கனகராஜ் வாங்கவிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜுக்கு கோலிவுட்டில் இப்போது பயங்கர டிமாண்ட் இருக்கிறது. அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு பல பிரபலங்கள் ஆசையோடு காத்திருக்கின்றனர். அதற்கு காரணம் இதுவரை அவர் எடுத்த நான்கு படங்களுமே ஹிட் என்பதுதான். குறிப்பாக அவர் கடைசியாக இயக்கிய விக்ரம் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இதனால் லோகேஷின் டிமாண்ட் ஏறி தற்போது நம்பர் 1 இடத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

லியோவை முடித்த லோகேஷ்: லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோரை வைத்து லியோ படத்தை இயக்கியிருக்கிறார். காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் தமிழ்நாடு, திருப்பதி என பல்வேறு இடங்களில் நடந்தது. சில நாட்களுக்கு முன்னர்தான் ஷூட்டிங் முடிந்தது. படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யும் விரைவில் டப்பிங் கொடுக்கவிருக்கிறார்.
லோகேஷின் அடுத்தக்கட்ட ப்ளான்: லியோ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி 2வை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் இதற்கிடையே ரஜினியை வைத்து அவர் படம் இயக்குவார் என தகவல்கள் பரவின. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதுகுறித்து எதுவும் வராமல் இருந்தாலும் கிட்டத்தட்ட ரஜினியும், லோகேஷ் கனகராஜும் இணைவது உறுதியாகிவிட்டது. லியோவில் நடித்த மிஷ்கின்கூட அதை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
போட்டிப்போடும் தயாரிப்பு நிறுவனங்கள்: ரஜினிகாந்த்தும், லோகேஷ் கனகராஜும் இணையும் படத்தை தயாரிக்க மொத்தம் ஏழு நிறுவனங்கள் போட்டிப்போடுவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ரேஸில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பேனரின் கீழ் ரஜினி கடைசியாக நடித்த ஜெயிலர் படமும் சூப்பர் ஹிட்டடித்திருப்பதால் கண்டிப்பாக லோகேஷ் - ரஜினி படத்தை சன் பிக்சர்ஸே தயாரிக்கும் என கருதப்படுகிறது.
சம்பளம்: இந்நிலையில் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கப்போகும் படத்துக்கு லோகேஷ் கனகராஜ் வாங்கவிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்காக லோகேஷ் கனகராஜ் 50 கோடி ரூபாயிலிருந்து 60 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் 50 கோடி ரூபாய் சம்பளத்தை தாண்டிய முதல் இயக்குநர் என்ற பெருமையை லோகேஷ் கனகராஜ் பெறுவார் என திரைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன.
முன்னதாக இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை தனது நண்பரும், இயக்குநருமான ரத்னகுமாருடன் இணைந்து லோகேஷ் தொடங்கிவிட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











