Maamannan Box Office - வசூல் வேட்டை நடத்தும் மாமன்னன்.. பலித்தது உதயநிதியின் ப்ளான்

சென்னை: Maamannan Box Office (மாமன்னன் பாக்ஸ் ஆபிஸ்)மாமன்னன் படம் ரிலீஸாகி நான்கு நாட்கள் முடிவடைந்திருக்கும் சூழலில் படத்தின் வசூல் குறித்த நிலவரம் வெளியாகியிருக்கிறது

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். முதல் இரண்டு படங்களுமே சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியதால் மாமன்னன் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

Here is the details about Maamannan 4 day box office collection report

மாமன்னன் கிளப்பிய விவாதம்: ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே மாமன்னன் படமும் இதுவரை யாரும் பேசாத அரசியலை பேசியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து ஒருவர் மக்கள் பிரதிநிதியாக வந்தாலும் சாதி திமிர் உள்ளவர்கள் அடிமையாகத்தான் நடத்துவார்கள் என்பதை வெளிப்படையாகவே பேசியிருந்தது மாமன்னன் படம். இதன் காரணமாக ரசிகர்களும் பெரும் வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.

வடிவேலு: அதேபோல் இதுவரை நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டும் தோன்றியிருந்த வடிவேலு மாமன்னனில் முழுக்க முழுக்க வேறு மாதிரி தோன்றியிருக்கிறார். அதிகாரத்திற்கு வந்தும் அடிமையாக இருக்கும் வலியை தனது உடல்மொழியிலும், முக பாவனையிலும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக இடைவேளை காட்சியின்போது மகனுக்காக உட்காருவதா வேண்டாமா என யோசிக்கும் தருணத்திலும், உட்கார்ந்த பிறகு ஃபகத் பாசிலிடம் பேசும் இடத்திலும் அதகளமாக ஸ்கோர் செய்திருந்தார் வடிவேலு

மிரட்டிய ஃபகத் பாசில்: ஒருபக்கம் வடிவேலு இப்படி ஸ்கோர் செய்ய மறுபக்கம் ஃபகத் பாசில் தனது வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கண்களாலேயே நடித்து ஒவ்வொரு சீனையும் அசால்ட்டாக டீல் செய்து அப்ளாஸை அள்ளுகிறார். இதன் காரணமாக அவரது நடிப்பில் வெளியான படங்களில் மாமன்னன் படம் கரியர் பெஸ்ட்டாக இருக்கும் என ரசிகர்கள் சிலாகித்துவருகின்றனர்.

Here is the details about Maamannan 4 day box office collection report

வசூல் நிலவரம் எப்படி?: இப்படி மாமன்னன் படம் மேக்கிங், நடிகர்களின் நடிப்பு, கதைக்களம் என அனைத்திலும் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல் வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. படம் வெளியான நாள் பக்ரீத் என்பதாலும் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வந்ததாலும் வணிக ரீதியாகவும் படம் வென்றிருக்கிறது. இதனை உதயநிதி ஸ்டாலினும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மொத்த வசூல் எவ்வளவு?: படம் வெளியான முதல் நாள் 6.75 கோடி ரூபாய், இரண்டாம் நாள் 4 கோடி ரூபாய், மூன்றாம் நாள் 6.25 கோடி ரூபாய், நான்காம் நாளான நேற்று 6.54 கோடி ரூபாய் என மொத்தம் நான்கு நாட்களில் 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இன்று 4 கோடியிலிருந்து 5 கோடி ரூபாய்வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் போட்ட ப்ளான்படி எல்லாமே நல்லபடியாக சென்றுகொண்டிருப்பதால் நிச்சயம் இந்தப் படம் மெகா ஹிட் வரிசையில் இணைந்துவிடும் என ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X