Maaveeran Audio Launch - மாவீரன் ஆடியோ வெளியீட்டு விழா.. தொகுப்பாளர்கள் யார் தெரியுமா?

சென்னை: Maaveeran Audio Launch (மாவீரன் இசை வெளியீட்டு விழா) மாவீரன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் இன்று மாலை நடக்கவிருக்கும் சூழலில் விழாவை தொகுத்து வழங்குபவர்களின் விவரம் தெரியவந்திருக்கிறது.

பிரின்ஸ் படத்தின் மாபெரும் தோல்விக்கு பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் என அவர் நடித்த இரண்டு படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாய் வசூலித்த சூழலில் பிரின்ஸ் அடைந்த தோல்வி பேசுபொருளானது. எனவே மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாவீரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பதற்கு சிவகார்த்திகேயன் தயாராக இருக்கிறார்.

Here is the details about Maaveeran Pre Release Event Compilers

மடோன் அஸ்வின்: மடோன் அஸ்வின் மண்டேலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். யோகிபாபுவை வைத்து காமெடியுடன் சமூக அக்கறையுள்ள விஷயத்தை அந்தப் படத்தில் பேசி கவனம் ஈர்த்த அவர் அப்படத்துக்காக தேசிய விருதையும் வென்றார். எனவே மடோன் அஸ்வின் நிச்சயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருவார் என பலர் கணித்திருக்கின்றனர். அவர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் ஜெயண்ட்: மாவீரன் படம் முதலில் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது. எனவே மாவீரன் திரைப்படம் ஜூலை மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவித்தது. அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

செகண்ட் சிங்கிள்: மாவீரன் படக்குழு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தபடி கடந்த மாதம் இரண்டாவது சிங்கிளான வண்ணாரப்பேட்டையில பாடல் வெளியானது. பாடலை சிவாவும், அதிதி ஷங்கரும் பாடியிருக்க யுகபாரதி எழுதியிருந்தார்.. தற்போது

ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்: இந்நிலையில் மாவீரன் படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. மேலும் ட்ரெய்லரை பார்ப்பதற்கு சிவாவின் ரசிகர்கள் ரெடியாகிவருகின்றனர்.

தொகுப்பாளர்கள்: இந்தச் சூழலில் மாவீரன் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கப்போகும் தொகுப்பாளர்கள் பற்றிய விவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி விழாவை ராஜுவும், பாவனாவும் தொகுத்து வழங்குகிறார். இதுகுறித்த அறிவிப்பை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருக்கிறது. ராஜு ஏற்கனவே வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டை தொகுத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X