Manobala - ஒருதடவை மருத்துவமனைக்கு சென்றால் 10 லட்சம் - மனோபாலாவின் மறுபக்கம்

சென்னை: Manobala (மனோபாலா) மனோபாலா ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று வந்தால் 10 லட்சம் ரூபாய் செலவாகும் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மனோபாலா ஊர்க்காவலன், மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும், பிள்ளை நிலா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட திரைப்படங்கள இயக்கியிருக்கிறார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து பின் இயக்குநராக மாறிய மனோபாலா தனது படைப்புகளின் மூலம் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தவர் என்பது நினைவுகூரத்தக்கத்து.

Here is the details about manobalas Treatment cost and net worth

சீரியல்கள் இயக்கிய மனோபாலா: பொதுவாக பெரிய திரையில் படங்களை இயக்கிவிட்டு சின்னத்திரையில் சீரியல்களை இயக்குவது அரிதிலும் அரிது. பாலசந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா போன்றவர்கள் வரிசையில் மனோபாலாவும் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கியிருக்கிறார். இதுவரை அவர் 10க்கும் மேற்பட்ட சீரியல்களை இயக்கியிருக்கிறார். அதில் பெரும்பாலானவை ஹிட்டாகியுள்ளன.

ஈகோ இல்லாத மனோபாலா: சினிமாவில் ஒருவருக்கு ஒருவர் எப்போதும் ஈகோ பார்த்துக்கொள்வார்கள் என்ற பேச்சு நீண்ட காலமாகவே உண்டு. அதை உடைத்துக்காட்டியவர் மனோபாலாதான். யாரிடமும் ஈகோ பார்க்காத அவர் எல்லோரிடமும் நட்புடனும், அன்புடனும் பழகியவர். திரைப்பட சங்கங்களுக்குள் ஏதேனும் ஒரு பிரச்னை என்றால் உடனடியாக மனோபாலா தூது புறாவாக மாறுவார் என்றும் திரைத்துறையில் பலர் கூறுகின்றனர்.

Here is the details about manobalas Treatment cost and net worth

300க்கும் மேற்பட்ட படங்கள்: இயக்குநர், தயாரிப்பாளர் மட்டுமின்றி நடிகராக 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் நடிப்பால் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர். அவர் கடைசியாக விஜய் நடித்திருக்கும் லியோ, கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தியன் 2வுக்காக தனது ட்ரேட் மார்க் ஹேர் ஸ்டைலையும் மனோபாலா வெட்டிக்கொண்டார் என ஷங்கர் தெரிவித்திருந்தார்.

உயிரிழந்த மனோபாலா: இந்தச் சூழலில் அவருக்கு குடிப்பழக்கமும், சிகரெட் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்தார். அதன் பிறகு வீட்டில் இருந்தபடியே சிகிச்சையை எடுத்துக்கொண்டார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியது.

ஒருமுறை சென்றால் பத்து லட்சம் ரூபாய்: இந்நிலையில் மனோபாலா சிகிச்சைக்காக ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று வந்தால் 10 லட்சம் ரூபாய் செலவாகும் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. மகன் அமெரிக்காவில் செட்டில் ஆனாலும் தன்னுடைய சம்பாத்தியத்தில்தான் சிகிச்சையை அவர் மேற்கொண்டு வந்தாராம். மேலும் இதுவரை சினிமாவில் அவர் நடித்து, இயக்கி சேர்த்திருக்கும் சொத்து மதிப்பு மொத்தமே 30 கோடி ரூபாய்தானாம்.

பல படங்களில் நடித்து அவர் சம்பாதித்தாலும் சிகிச்சைக்காகவே ஒரு தொகை அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், உள்ளே எவ்வளவு பெரிய சோகத்தை வைத்துக்கொண்டு நம்மை சிரிக்க வைத்திருக்கிறார் என சோகமாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X