Mark Antony Box Office - பட்டையை கிளப்பும் மார்க் ஆண்டனி பாக்ஸ் ஆபிஸ்.. விஷால் ஹேப்பி
சென்னை: Mark Antony Box Office (மார்க் ஆண்டனி பாக்ஸ் ஆபிஸ்) விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிவருகிறது.
விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட்டுக்கு காத்துக்கொண்டிருந்தார். எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்த அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

நல்ல வரவேற்பு: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். இன்று நேற்று நாளை போன்ற படங்கள் அதற்கு உதாரணம். அப்படிப்பட ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர்.
கலக்கிய ஆதிக்: ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன்னதாக த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். அந்த இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. ஆனால் இரண்டு படங்களில் விட்டதை மார்க் ஆண்டனி படத்தில் பிடித்துவிட்டார். காட்சிக்கு காட்சி போர் அடிக்காமல் படத்தை அவர் நகர்த்தி சென்ற விதம் பெரும் பாராட்டை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது.
எஸ்.ஜே.சூர்யா: படத்தின் ஹைலைட்டாக இருந்தது நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாதான். வயதான எஸ்.ஜே.சூர்யாவாகவும், இள வயது எஸ்.ஜே.சூர்யாவாகவும் தனது நடிப்பில் வேரியேஷன் காண்பித்து அசத்தியிருக்கிறார் படத்தில். முக்கியமாக இரண்டு எஸ்.ஜே.சூர்யாக்களும் ஃபோனில் பேசிக்கொள்ளும் காட்சியிலும், சில்க் ஸ்மிதா காட்சியிலும் சூர்யாவின் நடிப்பு பட்டாசு ரகம். அவர் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் கைத்தட்டி என்ஜாய் செய்தனர்.
பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்: படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் திரைக்கதை போர் அடிக்காமல் சென்றதால் அது எதுவும் பெரிதாக தெரியவில்லை. இதனால் இன்னமும் திரையரங்குக்கு மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக மார்க் ஆண்டனியின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் விஷாலுக்கு நிம்மதி தரக்கூடியதாகவே இருக்கிறது.
50 கோடி க்ராஸ்: படம் கடந்த 15ஆம் தேதி வெளியானது. முதல் நாளிலிருந்தே பாசிட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்ததால் ஐந்து நாட்களில் படம் 58 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் வெளியாகி ஆறு நாட்கள் முடிவடைந்திருக்கும் சூழலில் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இதுவரை 60லிருந்து 65 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஷாலுக்கு ரொம வருடங்கள் கழித்து ஒரு மெகா ஹிட் கிடைத்திருப்பதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











