Thalapathy 68 - தளபதி 68.. மைக் மோகன் கரியரில் முதன்முறை.. வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: Thalapathy 68 (தளபதி 68) தளபதி 68 படத்தில் நடிப்பதற்காக மைக் மோகன் வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது அவருக்கு 68ஆவது படம். ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு 25ஆவது படம். அதேபோல் புதிய கீதை படத்துக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா விஜய் படத்துக்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் இந்தப் படம் புதிய ஜானரில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

என்ன கதை: படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் குறித்த தகவல்கள் யூகங்களாக சொல்லப்படுகின்றன. அதன்படி அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே எமோஷன் தான் படத்தின் ஒன்லைன் என கூறப்படுகிறது. இல்லை இல்லை டிஏஜிங் ஸ்கேனிங்போது எடுத்த புகைப்படத்தில் எதிர்காலத்துக்கு வருக என வெங்கட் பிரபு ட்விட்டரில் கேப்ஷன் போட்டிருந்தார் எனவே இந்தப் படம் டைம் ட்ராவலை மையப்படுத்தி எடுக்கப்படும் என சிலர் கூறுகின்றனர்.
பட பூஜை: படத்தின் பூஜை கடந்த ஜூன் மாதமே போடுவதாக இருந்தது. ஆனால் அப்போதே போட்டால் லியோவுக்கு ஏதேனும் அஃபெக்ட் வந்துவிடுமோ என்று யோசித்த விஜய் பூஜையை தள்ளிவைத்தார். அதன்படி சமீபத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் பூஜை போடப்பட்டது. அதில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டனர். பூஜையை முடித்த கையோடு பாடல் ஷூட்டிங் நடத்தப்பட்டது.
என்ன பாடல்: அந்தப் பாடலுக்கு ராஜுசுந்தரம் நடனம் அமைத்தார் என்றும் பிரபுதேவாவும், விஜய்யும் இணைந்து ஆடினார்கள் என்றும் கூறப்படுகிறது. படத்தின் இரண்டாவது ஷெட்யூலை படக்குழு வெளிநாட்டில் பிளான் செய்திருக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் வில்லனாக அரவிந்த் சாமி நடிப்பார் என்று முதலில் கருதப்பட்டது.

மைக் மோகன்: ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக 80ஸ் ஃபேவரைட் ஹீரோவான மைக் மோகன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. மோகனுக்கென்று இன்னமும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரை வில்லன் கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்பதை பார்க்க ஆர்வத்துடன் இருப்பதாக ரசிகர்கள் இப்போதே கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
சம்பளம்: இந்நிலையில் தளபதி 68ல் நடிப்பதற்காக மைக் மோகன் வாங்கியதாக ஒரு சம்பள தொகை சொல்லப்படுகிறது. அதன்படி இதில் நடிப்பதற்கு அவர் இரண்டு கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறாராம். இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இத்தனை வருட கரியரில் கோடிகளில் சம்பளம் வாங்குவது இதுவே முதன்முறை ஆகும். மேலும் இப்படத்தில் விஜய்க்கு 175 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











