Mysskin - மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு சாபம் கொடுத்த மிஷ்கின்.. என்ன இப்டி இறங்கிட்டாரு?
சென்னை: Maaveeran (மாவீரன்) மாவீரன் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தபோது சிவகார்த்திகேயன் குறித்து மிஷ்கின் பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
பிரின்ஸ் படத்துக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.மேலும் மாவீரன் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

மாவீரன் ஆடியோ வெளியீட்டு விழா: இதற்கிடையெ மாவீரன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மாவீரன் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மிஷ்கின், சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரி இல்லை ரஜினியேதான் என கூறினார். அது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
செய்தியாலர் சந்திப்பு: இந்நிலையில் மாவீரன் படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மைக்கை பிடித்த மிஷ்கின், "நடிகராக நான் பழகவில்லை, ரொம்பவும் ஒழுக்கத்தோடு இருக்க வேண்டியதாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் எல்லாம் எப்படி இத்தனை வருஷம் ஒழுக்கமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. இதற்காகவே சிவாவுக்கு விருது வழங்க வேண்டும். ஒழுக்கமான நடிகர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்துவிட்டார்.
ஸ்வீட் பாய் சிவா: சிவகார்த்திகேயன் ஒரு ஸ்வீட் பாய். ரஜினி மாதிரி சிவா என நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அதனை நான் உண்மையாக உணர்கிறேன். ஏனெனில் சிவகார்த்திகேயன் எல்லோரிடமும் நல்ல பெயரை எடுத்துக்கொண்டிருக்கக்கூடிய ஒரு பையன். சிவகார்த்திகேயனை பற்றி இதற்கு முன்னதாக பலர் சொன்னபோதெல்லாம் வெறும் கதையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இப்போது தள்ளி நின்று பார்க்கையில்தான் புரிகிறது எல்லாமே உண்மை என்று.

சாரி கேட்பார்: சிவா ரொம்ப உண்மையான ஒரு பையன். எல்லோரிடமும் ரொம்ப அன்பாக பழகக்கூடியவர். படத்தில் 15 பேரை அடிக்கிற சண்டைக் காட்சியில் மொத்தம் 40 ஷாட்டுகளை இரவு முழுவதும் இயக்குநர் எடுத்தார். அந்த 40 ஷாட்டுகளிலும் 15 பேரிடமும் சென்ற சிவகார்த்திகேயன் அண்ணா சாரி அண்ணா என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தார். ஒருமுறையாவது இவர் அதை விட்டால் சாரி கேட்பது போல் நடிக்கிறார் என்பதை உறுதி செய்யலாம் என நினைத்தேன். ஆனால் விடிய விடிய எல்லோரிடமும் சாரி கேட்டுக்கொண்டே இருந்தார்.
என் சாபம் இதுதான்: அந்த ஒரு விஷயம் போதும் சிவகார்த்திகேயன். நீங்கள் 40 -50 வருடங்கள் சினிமாவில் இருக்க வேண்டும் என சாபம் கொடுக்கிறேன்" என்றார். மிஷ்கினின் இந்தப் பேச்சை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். மேலும் அவர் பேசிய வீடியோவை பகிர்ந்து எங்கள் சிவாவுக்கு உள்ள மனசே தனிதான் எனவும் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











