Nayanthara - கமலுடன் முதன்முறையாக நடிக்கும் நயன்தாரா?.. சம்பளத்தில் வைத்த கண்டிஷன் இதுவா..?
சென்னை: Nayanthara Salary (நயன்தாரா சம்பளம்) கமல் ஹாசனுடம் நயன் தாரா நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கும் சூழல் அந்தப் படத்துக்கான சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிப்பிலிருந்து ஒதுங்கி அரசியலில் கவனம் செலுத்திய கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படத்தில் கமலின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் உலக நாயகனின் நடிப்பு இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது. அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

க்ளாசிக் கூட்டணி: விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தை அடுத்து சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கமல்.அந்தவகையில் படங்களை தயாரிக்கவும் செய்யும் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். ஹெச்.வினோத் - கமல் படம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது.
கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனின் அடுத்தடுத்த படங்களில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருப்பது அவரும் மணிரத்னமும் இணையும் படம்தான். ஏற்கனவே இவர்கள் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத க்ளாசிக்காக நாயகன் படத்தை கொடுத்தனர். எனவே இந்தப் படத்தின் மீதான ஆவல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. தற்போது திரைக்கதை எழுதும் பணியில் மணிரத்னம் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
படத்தில் யார் யார்?: இந்தச் சூழலில் இருவரும் இணையும் படத்தில் சிம்பு முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அண்மையில் வெளியான தகவலின்படி சிம்பு நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. இதனையடுத்து ஜெயம் ரவி நடிக்கலாம் என கூறப்பட்டது. இந்த சூழலில் படத்தின் ஹீரோயின் குறித்த புதிய தகவல் கடந்த சில நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
நயன்: அதன்படி படத்தில் நயன்தாரா கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. அப்படி நயன்தாரா நடிக்கும்பட்சத்தில் இத்தனை வருடங்களில் கமலுக்கு ஜோடியாக நயன் தாரா முதன்முதலில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் படத்துக்காக நயன்தாரா பெறவிருக்கும் சம்பளம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வளவு சம்பளம்: இந்தப் படத்தில் நடிப்பதற்காக நயன் தாரா 12 கோடி ரூபாய் சம்பளம் பெறவிருப்பதாக திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது. நயன் நடிப்பில் வெளியான ஜவான் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தது. அதிலிருந்து அவர் தனது சம்பளத்தை ஏற்றிவிட்டார் என்றும் அடுத்த ஹிந்தி படத்துக்கும் 12 கோடி ரூபாய்தான் சம்பளம் என்றும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











