Annapoorani - மாஸ் காண்பிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.. அன்னபூரணி பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
சென்னை: Annapoorani Box Office (அன்னபூரணி பாக்ஸ் ஆபிஸ்) அன்னபூரணி படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரியவந்திருக்கிறது.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு உயிர், உலக் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் நயன் சினிமாவில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் அட்லீ ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி தந்தார்.

பாலிவுட்டில் அறிமுகம்: அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் மூலம் நயனும் ஹிந்தியில் அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு அங்கும் சிறப்பான வரவேற்பே கிடைத்திருக்கிறது. அவரது ஆக்ஷன் காட்சிகளை பார்த்த பாலிவுட் திரையுலகம் இன்னும் சில படங்களில் நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரன்வீர் சிங்குடன் அவர் நடிக்கவுள்ளது உறுதியாகிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
நயன் 75: இதற்கிடையே தமிழிலும் அவர் பிஸியாகவே இருக்கிறார். ஜெயம் ரவியுடன் நடித்த இறைவன் படம் தமிழில் கடைசியாக வெளியானது. அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் படம் இல்லாமல் அன்னபூரணி, மண்ணாங்கட்டி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார் நயன். இதில் அன்னபூரணி திரைப்படம் அவருக்கு 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னபூரணி: இப்படத்தை இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். நயன் தாராவுடன் கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், ஜெய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக நடித்திருக்கும் நயன், சமையல் கலைஞராக ஆசைப்படுவதும்; அதற்கு விழும் முட்டுக்கட்டைகள் மற்றும் அதை நயன் தாண்டுவதையும் மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
ரிலீஸ்: நயன்தாராவின் 75ஆவது படம் என்பதால் இது மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருவதால் கூட்டம் வராதோ என்ற அச்சம் படக்குழுவுக்கு இருந்தது. அதன்படிதான் முதல் நாளும் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் செனனி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் முதல் நாள் ரசிகர்கள் கூட்டம் சொல்லிக்கொள்ளும்படி வந்தது.
எனவே அப்படம் முதல்நாளில் 60 லட்சம் ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்றின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி இரண்டாவது 90 லட்சம் வரை படம் வசூலித்துவிட்டதாம். இதனால் முதல் இரண்டு நாட்களில் 1.5 கோடி ரூபாயை வசூலித்து அன்னபூரணி மாஸ் காட்டுவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் சொல்கின்றன.


Click it and Unblock the Notifications











