Oppenheimer Box Office - பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் ஓப்பன்ஹெய்மர்..கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

சென்னை: Oppenheimer Collection (ஓப்பன்ஹெய்மர் வசூல்) ஹாலிவுட் படமான ஓப்பன்ஹெய்மர் படம் ரிலீஸாகி மூன்று நாட்கள் முடிவடைந்திருக்கும் சூழலில் பாக்ஸ் ஆஃபிஸில் அந்தப் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துவருகிறது.

உலகின் தலைசிறந்த இயக்குநர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கிறிஸ்டோபர் நோலன். யாரும் தொட துணியாத சப்ஜெக்ட்டை தொட்டு அதை திரைப்படமாக கொடுப்பதில் வல்லவர். அதேசமயம் ரொம்பவே ஆழமான சப்ஜெக்ட்டை தொடுவதால் அவரது படம் பலருக்கு புரியாது என்ற ஒரு விமர்சனமும் எழுவது வழக்கம். இருந்தாலும் அவரது படங்களுக்கு என்று எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் இருக்கும்.

Here is the Details about Oppenheimer 3rd Day Box Office Collection

ஓப்பன்ஹெய்மர்: இந்தச் சூழலில் கிறிஸ்டோபர் நோலன் ஓப்பன்ஹெய்மர் படத்தை இயக்கியிருக்கிறார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹீரோஷிமா மற்றும் நாகசாகியில் பேரழிவை அமெரிக்கா ஏற்படுத்த காரணமாக இருந்த அணுகுண்டுகளை கண்டுபிடித்த ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன்.

ஜீரோ கிராஃபிக்ஸ்: குண்டு வெடிப்பு சம்பந்தமான காட்சிகள் என்றாலே எடு அந்த சிஜியை என சூழ பல நாட்டு திரைத்துறைகளில் நிலவிவரும் நிலையில் அணுகுண்டு கண்டுபிடித்தவரின் வாழ்க்கை வரலாற்று படத்தை கிராஃபிக்ஸே இல்லாமல் உருவாக்கியிருக்கிறார் நோலன். இதை அவர் ஓபனாக சொல்லவும் செய்தார். இதனையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.

நல்ல ரெஸ்பான்ஸ்: இந்தச் சூழலில் ஓப்பன்ஹெய்மர் படமானது கடந்த 21ஆம் தேதி வெளியானது. இந்தியாவில் எப்போதுமே கிறிஸ்டோபர் நோலனின் படங்களுக்கு ரசிகர்கள் நல்ல ரெஸ்பான்ஸையே கொடுப்பார்கள். ஏனெனில் இண்ட்டெர்ஸ்டெல்லர்,இன்செப்ஷன் உள்ளிட்ட படங்கள் இந்திய ரசிகர்களால் ரசிக்கப்பட்டவை. அதன்படி ஓப்பன்ஹெய்மர் படத்துக்கும் இந்தியாவில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.

Here is the Details about Oppenheimer 3rd Day Box Office Collection

குவியும் கூட்டம்: குறிப்பாக படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானதாலும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பதாலும் ரசிகர்கள் படத்தை பார்க்க படையெடுத்தனர். படத்தை பார்த்த ரசிகர்கள் இது வழக்கமான நோலன் சினிமா போல்தான் இருக்கிறது கொஞ்சம் புரியவில்லை ஆனால் நன்றாக இருக்கிறது என ஒரு தரப்பினரும், கொஞ்சம் கவனம் செலுத்தி பார்த்தால் புரியும். குறிப்பாக பகவத் கீதை தொடர்பான காட்சி அட்டகாசமாக இருந்தது என மறுதரப்பினரும் கூறிவருகின்றனர்.

வசூல் நிலவரம்: இதன் காரணமாக படத்தின் வசூலும் நல்ல விதமாகவே இந்தியாவில் இருக்கிறது. அதன்படி முதல்நாளான வெள்ளிக்கிழமை12 கோடி ரூபாயையும், இரண்டாம் நாளான சனிக்கிழமை 17 கோடி ரூபாயையும் வசூலித்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மேலும் 20 கோடி ரூபாயை வசூலித்து 50 கோடியை தொடும் என கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஓப்பன்ஹெய்மர் 20 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும், இதன் காரணமாக தற்போது படத்தின் வசூல் 49 கோடியை தொட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X