Prashanth - தளபதி 68ல் பிரசாந்த் கேரக்டர் என்ன தெரியுமா?.. முழு விவரம் உள்ளே.. வேற மாதிரி இருக்குமே

சென்னை: Prashanth in Thalapathy 68 (தளபதி 68ல் பிரசாந்த்) தளபதி 68ல் நடிகர் பிரசாந்த்துக்கு என்ன ரோல் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

லியோ படத்தில் நடித்து முடித்து கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய படங்கள் வசூலை குவித்ததாக கூறப்பட்டாலும் விமர்சன ரீதியாக அடிவாங்கியிருப்பதாகவே திரைத்துறையினரால் கூறப்படுகிறது.

Here is the Details about Prashanth Character in Thalapathy 68

காப்பாற்றுமா தளபதி 68: லியோ படம் 460 கோடி ரூபாயை ஒரே வாரத்தில் வசூலித்ததாக கூறப்பட்டாலும் படத்தின் ரிசல்ட் என்னவோ விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் கொஞ்சம் அப்செட்டைத்தான் கொடுத்திருக்கிறது. எனவே தளபதி 68 படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் அவர்கள். வெங்கட் பிரபு படம் அனைவரையும் கவரும் என்பதால் தளபதி 68 காப்பாற்றும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

தளபதி 68 பூஜை: லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு தளபதி 68 பூஜை போடப்பட்டது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்ட பூஜையில் விஜய், வெங்கட் பிரபு, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, கங்கை அமரன், மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதுதொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது.

பாடல் ஷூட்டிங்: பூஜையை முடித்துவிட்டு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகவும் அதனை ராஜுசுந்தரம் கோரியோகிராஃபி செய்ய விஜய், பிரசாந்த் உள்ளிட்டோர் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது. அடுத்தக்கட்ட ஷெட்யூலுக்காக படக்குழு பாங்காக்கிற்கு சென்றிருக்கிறது. . இப்படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் ரோல்: இதில் இன்னொரு ஹைலைட்டாக இருப்பது டாப் ஸ்டார் பிரசாந்த் இந்தப் படத்தின் மூலம் தமிழில் ரீ என் ட்ரி தருவது இருக்கிறது இந்நிலையில் அவருக்கு படத்தில் என்ன ரோல் என்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்தப் படத்தில் விஜய்க்கு நெருங்கிய நண்பராக பிரசாந்த் நடிக்கிறார் என்றும் விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. முக்கியமாக பிரசாந்த்தின் கதாபாத்திரத்தில் பயங்கர ட்விஸ்ட் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X