Rashmika Mandanna - நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின் அழகின் ரகசியம் இதுதான்

ஹைதராபாத்: Rashmika Mandanna (ராஷ்மிகா மந்தனா) நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவின் அழகின் ரகசியத்துக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் அறிமுகமான அவரை தெலுங்கு திரையுலகம் கெட்டியாக பிடித்துக்கொண்டது. அங்கு அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடிக்க அவரது கிராஃப் சரசரவென உயர்ந்தது. அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமடைந்தார்.

பான் இந்தியா ஹீரோயின்: ராஷ்மிகா மந்தனா மீதான கிரேஸ் கீதா கோவிந்தம் படத்திலிருந்தே ரசிகர்களுக்கு ஆரம்பித்துவிட்டது என்றாலும் அவரை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்த்தது புஷ்பா திரைப்படம். பான் இந்தியா அளவில் வெளியாகி படமும் ஹிட்டானது. அதிலும் படத்தின் பாடல்களில் ராஷ்மிகாவின் நடனம் பெரும் ட்ரெண்டானதால் ராஷ்மிகாவும் இந்திய அளவில் கவனிக்கப்படும் ஹீரோயினாக மாறினார். இதன் காரணமாக ஹிந்தியிலும் கமிட்டாகியிருக்கிறார் அவர்.

ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா: அந்தவகையில் அவர் ஹிந்தியில் ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் நடித்துவருகிறார். இதற்கு முன்னதாக அவர் மிஷன்மஜ்னு என்ற ஹிந்தி படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படம் டீசண்ட்டான வரவேற்பை பெற்றது. அதேபோல் அனிமல் படமும் ஹிட்டாகி ஹிந்தியில் தனக்கு ஒரு நிலையான இடத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ராஷ்மிகா இருக்கிறார்.

நேஷனல் க்ரஷ் அழகின் ரகசியம்: இந்நிலையில் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகாவின் அழகின் ரகசியம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, அவகாடோ பழத்தை ஜூஸாகவோ அல்லது உணவாகவோ வாரத்திற்கு மூன்று முறை அவர் எடுத்துக்கொள்வார் என கூறப்படுகிறது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு சர்க்கரைவள்ளி கிழங்கை அவித்து உணவாக எடுத்துக்கொள்வாராம்.

வெறும் வயிற்றில் தண்ணீர்: பொதுவாகவே காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது ரொம்பவே ஆரோக்கியம் என்று மருத்துவர்கள் பல வருடங்களாக கூறிவருகிறார்கள். அதனை ராஷ்மிகா தவறாமல் கடைப்பிடித்து வருகிறார். அதேபோல், முகத்தின் பொலிவுக்காக மாஸ்ட்ரைஸர் க்ரீம் சன் ஸ்க்ரீன் க்ரீமை தவறாமல் பூசிக்கொள்வாராம். இந்தத் தகவல் இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

 Here is the details about Rashmika Mandanna Beauty Secrets

ராஷ்மிகாவின் படங்கள்: ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் நடித்துவருகிறார். அதேபோல் தமிழில் அவர் கார்த்தியுடன் நடித்த சுல்தான், விஜய்யுடன் நடித்த வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்திருப்பதால், தமிழில் நிலையான இடத்தை பிடிக்கும் திட்டத்தோடு ரெயின்போ படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனிமல் ப்ரீ டீசர்: இதற்கிடையே அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் வாங்கா இயக்கத்தில் உருவாகியிருக்கும் அனிமல் படத்தின் ப்ரீ டீசர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X