காமெடி நடிகர் மட்டுமில்லை.. பிஸ்னெஸ்ஸில் எவ்வளவு சீரியஸ் தெரியுமா?.. ரெடின் கிங்ஸ்லியின் மறுபக்கம்
சென்னை: Redin Kingsley (ரெடின் கிங்ஸ்லி) நடிகராக மட்டுமின்றி ரெடின் கிங்ஸ்லி செய்துவரும் பிற தொழில்கள் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது.
சினிமாவில் க்ரூப் டான்சராக அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி நெல்சன் திலீப்குமார் கல்லூரி படிக்கும்போதே அவருக்கு பழக்கமானார். ஒரு ஈவெண்ட் நடத்துவதற்காக இரண்டு பேருக்கும் ஏற்பட்ட அறிமுகம் பல வருடங்களாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதனையடுத்து நெல்சன் திலீப்குமார் வேட்டை மன்னன் படத்தை ஆரம்பித்தபோது ரெடினுக்கும் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்தப் படம் பாதியில் நின்றது.

கோலமாவு கோகிலா: அதன் பிறகு பல வருடங்கள் கழித்து நெல்சன் திலீப்குமார் நயன் தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார் நெல்சன். அந்தப் படம் மெகா ஹிட்டாக ரெடினின் கதாபாத்திரமும் கவனம் ஈர்த்தது. தொடர்ந்து பல படஙக்ளின் வாய்ப்பும் கிடைத்தது.
பிஸி நடிகர்: அதன்படி எல்கேஜி, கூர்கா, ஏ1, ஜாக்பாட், நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, இடியட், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், காஃபி வித் காதல், ஜெயிலர் என வரிசையாக படங்களில் நடித்தார். ரஜினிகாந்த்துடன் ஜெயிலர் படத்திலும் அவரது கேரக்டர் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. இதன் காரணமாக ரெடின் கிங்ஸ்லி தற்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
திருமணம்: 46 வயது ஆகும் ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். சூழல் இப்படி இருக்க நேற்று முன் தினம் மைசூரில் வைத்து ஒரு படப்பிடிப்பு தளத்தில் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர். இந்நிலையில் ரெடின் கிங்ஸில் செய்யும் பிற தொழில்கள் குறித்த தகவல்களும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
ரெடினின் தொழில்கள்: அதாவது அவர் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியை வைத்திருப்பதாகவும் அதன் பெயர் ஸ்பெல் ஃபோன் என்றும் கூறப்படுகிறது. அந்த கம்பெனி மூலம்தான் பொருட்காட்சி, கண்காட்சிகளில் இடம்பெறும் ஜெயண்ட் வீல்கள், குழந்தைகள் விளையாடுவதற்காக வைக்கப்படும் விஷயங்கள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர்த்து டான்ஸ் பள்ளி ஒன்றை ஆரம்பித்தும் நடனமும் சொல்லிக்கொடுக்கிறாராம். முக்கியமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் பண்டிகை காலங்களில் இவரது கம்பெனிதான் பிரமாண்டமான செட் போடும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











