S.J.Suryah Salary - மார்க் ஆண்டனி.. நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: S.J.Suryah Salary (எஸ்.ஜே.சூர்யா சம்பளம்) மார்க் ஆண்டனி படத்துக்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டாக அடுத்ததாக குஷி படத்தை இயக்கினார். அந்தப் படமும் மெகா ஹிட்டானது. இதனையடுத்து முன்னணி இயக்குநர் என்று பெயர் எடுத்த அவர் அடுத்தடுத்து நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

Here is the Details about S.J.Suryah Salary in Mark Antony

நடிகர் அவதாரம்: எஸ்.ஜே. சூர்யாவுக்கு நடிப்பின் மீது தீராத ஆர்வம் எப்போதும் உண்டு. அதனாலேயே தான் இயக்குநராகி இரண்டு படங்களில் வென்ற பிறகு அடுத்தடுத்து தான் இயக்கிய படங்களில் ஹீரோவாக நடித்தார். அவரின் டைரக்‌ஷனுக்கு எப்படி பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அதேபோல் அவரது நடிப்புக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இறைவி: எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு உச்சக்கட்டம் சென்றது என்றால் அது இறைவி படத்தில்தான். அந்தப் படத்தின் ஒவ்வொரு சீனிலுமே தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி அதகளம் செய்திருந்தார். அதனையடுத்து தொடர்ந்து அவருக்கு நடிகராக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இறைவிக்கு பிறகு அவர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் எஸ்.ஜே.சூர்யா நடிப்பின் இன்னொரு பரிமாணம்.

மாநாடு: இறைவி எப்படி அவருக்கு பெரிதும் கை கொடுத்ததோ அதேபோல்தான் சிம்புவுடன் அவர் நடித்த மாநாடு படம். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் வெங்கட் பிரபுவின் மேக்கிங் எப்படி கொண்டாடப்பட்டதோ அதுமாதிரி எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் கொண்டாடப்பட்டது. மாநாடு படம் எஸ்.ஜே.சூர்யாவே நினைத்து பார்க்காத பிரபல்யத்தை பெற்றுக்கொடுத்தது.

நடிப்பு அரக்கன்: மாநாடு படத்துக்கு பிறகு அவர் ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என கொண்டாடப்படுகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் மார்க் ஆண்டனி படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அப்படத்தில் விஷால்தான் ஹீரோ என்றாலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புதான் அதிகம் பேசப்படுகிறது. படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன.

சம்பளம்: இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்ததற்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கியதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது. அதன்படி அவர் மூன்று கோடி ரூபாய் சம்பளமாக பெற்றாராம். மார்க் ஆண்டனி படம் ஹிட்டாகியிருப்பதாலும் அவரது நடிப்பு பயங்கரமாக பேசப்படுவதாலும் அடுத்தடுத்த படங்களில் சூர்யாவின் சம்பளம் உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் சிலர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X