பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் பிறந்தநாள்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. அடேங்கப்பா இவ்வளவா

மும்பை: Shah Rukh Khan Birthday (ஷாருக்கான் பிறந்தநாள்) பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பாலிவுட் பாட்ஷா என அழைக்க்ப்படுபவர் ஷாருக்கான். இவருக்கென்று இந்தியா முழுவதும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இவர் கடைசியாக பதான் படத்தில் நடித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின் ஷாருக்கான் நடித்திருக்கும் படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Here is the details about Shah Rukh Khan Net worth

பதானுக்கு எதிர்ப்பு: நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருப்பதால் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. படத்தின் சிங்கிள் பாடல் வெளியானபோது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

பாசிட்டிவ் விமர்சனம்: இந்தச் சூழலில் படத்துக்கு எந்த மாதிரியான விமர்சனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பதான் படத்துக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர். மேலும் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகியிருந்த பதானில் ஷாருக்கானின் நடிப்பும், ஜான் ஆபிரஹாமின் வில்லத்தனமும் சிறப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர். குறிப்பாக வயது ஏற ஏற ஷாருக்கானுக்கு இளமையும் கூடுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். உலகம் முழுவதும் அந்தப் படமானது 1000 கோடி ரூபாய் வசூலித்தது.

ஜவான்: பதான் படத்துக்கு பிறகு அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான். படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். அந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படமானது கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

சொத்து மதிப்பு: இந்த சூழலில் ஷாருக்கான் இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை சொல்லிவருகின்றனர். இந்நிலையில் ஷாருக்கானின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 6000 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம்.

மொத்தம் 12 சொகுசு கார்களையும், அதாவது புகாட்டி வெய்ரோன், ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கூப், பென்ட்லி, பிஎம்டபிள்யூ 6 மற்றும் 7 சீரிஸ், ஆடி ஏ8எல், லேண்ட் ரோவர் ரேஞ்ச், டொயாட்டா க்ரூய்ஸ், மிட்சுபிஷி பஜேரோ, ஹுண்டாய் கிரேட்டோ மற்றும் வால்வோ பிஆர் 9 கார்களை வைத்திருக்கிறாராம். இவை தவிர்த்து மும்பை, லண்டன், துபாய் ஆகிய இடங்களில் மூன்று பங்களாக்களையும் வைத்திருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X