Suriya - சூர்யாவுக்கும் கே.வி.ஆனந்த்துக்கும் இதுதான் பிரச்னை.. பல வருட சீக்ரெட்டை சொன்ன நண்பர்
சென்னை: Suriya (சூர்யா) சூர்யாவுக்கும் கே.வி.ஆனந்த்துக்கும் என்ன பிரச்னை நடந்தது என்பது குறித்து ஆனந்த்தின் நண்பர் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. அவர் தற்போது கங்குவா படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கவிருக்கிறார். சமீப காலமாகவே அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்துமே தரமாக இருப்பதால் கண்டிப்பாக அடுத்தடுத்த படங்கள் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கை சூர்யா ரசிகர்களுக்கு இருக்கிறது.

சூர்யா - கே.வி.ஆனந்த் நட்பு: சூர்யாவின் திரை வாழ்க்கையை செதுக்கியவர்கள் என்று சில இயக்குநர்கள் இருக்கிறார்கள். நந்தா படத்தின் மூலம் சூர்யாவை செதுக்கினார் பாலா. அந்த வரிசையில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த்தும் ஒருவர். அவர் இப்போது உயிரோடு இல்லையென்றாலும் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய அயன், மாற்றான், காப்பான் ஆகிய படங்கள் எப்போதுமே உயிரோடு இருக்கும். குறிப்பாக அயன் படம் சூர்யாவின் கரியரை மாற்றிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
நட்பு முறிவு: இதற்கிடையே மாற்றான் படத்தின்போது சூர்யாவுக்கும் கே.வி.ஆனந்த்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அப்போது தகவல்கள் பரவின. ஆனால் அது எதனால் உருவானது என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் கே.வி.ஆனந்த்தின் நண்பர் சங்கர கிருஷ்ணமூர்த்தி என்பவர் அந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.
நண்பரின் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "சூர்யாவும் கே.வி. ஆனந்த்தும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவருக்குள்ளும் அபாரமான புரிதல் இருந்தது. சூர்யா எப்போதுமே தனது வேலையில் ஃபெர்ஃபக்ட்டாக இருப்பவர். அதிகம் பேசமாட்டார் என்றாலும் வேலையில் வேகம் இருக்கும். அதனால் ஆனந்த்துக்கும் சூர்யாவை ரொம்பவே பிடிக்கும்.
மாற்றான் பிரச்னை: நிலைமை இப்படி இருக்க இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே மாற்றான் பட சமயத்தில் சண்டை ஏற்பட்டது. அதாவது அந்தப் படத்தின் ரன்னிங் டைம் அதிகம் இருந்தது. எனவே சூர்யாவும், படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநர் கே.வி ஆனந்த்திடம் கேட்காமலேயே சில காட்சிகளை நீக்கிவிட்டார்கள். ஒரு படத்தில் எது இருக்க வேண்டும் எது இருக்கக்கூடாது என்பதை இயக்குநராகிய நான்தானே முடிவு செய்ய வேண்டும் என்பது கே.வி.ஆனந்த்தின் கருத்து.
அதை வைத்து இரண்டு பேருக்கும் பிரச்னை உருவானது. அதனால்தான் இரண்டு பேரும் பேசாமலேயே இருந்தார்கள். அதன் பிறகு காப்பான் பட வேலைகள் ஆரம்பித்தபோது சூர்யாவே கே.வி.ஆனந்த்திடம் சமாதானம் பேசினார். அதன் பிறகு இருவரும் சகஜமாக பேசிக்கொண்டனர். ஆனந்த்துக்கு கொரோனா என்றதும் சூர்யா மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி ஆனந்த்தை பார்க்க விடவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











