Suriya - வாடிவாசலுக்கு பிறகு சூர்யா நடிக்கவிருக்கும் படங்கள் தெரியுமா?.. வெளியான புது லிஸ்ட்
சென்னை: Suriya (சூர்யா) வாடிவாசல் படத்துக்கு பிறகு சூர்யா நடிக்கவிருக்கும் படங்கள் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கோலிவுட்டின் முன்னணி நடிகரான சூர்யா கடைசியாக நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் ஓடிடியில் வெளியானாலும் மெகா ஹிட்டடித்தன. குறிப்பாக சூரரைப் போற்று படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. அதேபோல், ஜெய் பீம் படம் மிகப்பெரிய பெயரை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இதனால் சூர்யாவின் மீது பலதரப்பட்ட மக்களின் கவனம் குழ்ந்திருக்கிறது.
கங்குவா: ஜெய் பீம் படத்தை முடித்த பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார் சூர்யா. ஒரு ஷெட்யூலை நடித்து முடித்த சூர்யா திடீரென அந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனயடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துவருகிறார். பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது. திஷா பதானி ஹீரோயினாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

முடிந்த கங்குவா ஷூட்டிங்: கங்குவா படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடந்தது. அதுதான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் என்றும் கூறப்பட்டது. அந்த ஷெட்யூல் சமீபத்தில் முடிந்ததை அடுத்து படத்தின் ஷூட்டிங் ஒட்டுமொத்தமாக முடிந்திருக்கிறது. இதனையொட்டி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்தார் சூர்யா. அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.
வாடிவாசல்: சூர்யா எத்தனை படங்களில் நடித்தாலும் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருப்பது வாடிவாசல் படத்தில்தான். வெற்றிமாறனுடன் முதல்முறையாக இணைவதால் எழுந்த எதிர்பார்ப்பு அது. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் வாடிவாசலின் ஷூட்டிங் எப்போது தொடங்கி படம் எப்போது வெளியாகும் என்று ஆவலோடு இருக்கின்றனர். கடந்த வருடம் டெஸ்ட் ஷூட்டும் நடைபெற்றது. படத்துக்கான கிராஃபிக்ஸ் பணிகள் லண்டனில் தற்போது நடந்துவருகிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.

வாடிவாசலுக்கு பிறகு என்னென்ன படங்கள்: இந்நிலையில் வாடிவாசல் படத்தில் நடித்து முடித்த பிறகு சூர்யாவின் அடுத்தடுத்த படஙக்ள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சைன்ஸ் பிக்ஷன் கதையில் சூர்யா நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும், ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜின் இரும்புக்கை மாயாவி: இதற்கிடையே சூர்யாவுக்காக லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே எழுதியிருக்கும் இருப்புக்கை மாயாவி படத்தையும் தூசி தட்ட முடிவெடுத்திருக்கிறாராம் சூர்யா. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்த்திரத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் முழு படத்தில் நடிக்க சூர்யா முடிவெடுத்துவிட்டார். அந்தப் படம் இரும்புக்கை மாயாவியாக இருக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











