வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள்.. அவரது முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?இவரும் காஸ்ட்லிதான் போல
சென்னை: Venkat Prabhu Birthday (வெங்கட் பிரபு பிறந்தநாள்) இயக்குநர் வெங்கட் பிரபு இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு நல்ல இயக்குநர் என்ற பெயரை முதல் படத்திலேயே பெற்றுவிட்டார். அதுமட்டுமின்றி படத்தை எந்தவித அலட்டலும் இல்லாமல் படு ஜாலியாக கொண்டுபோவதில் வல்லவர் என்ற பெயரையும் அடுத்தடுத்து அவர் இயக்கிய சரோஜா, கோவா உள்ளிட்ட படங்கள் கோலிவுட் ரசிகர்களுக்கு உணர்த்தின.

அஜித்துடன் ஆடிய மங்காத்தா ஆட்டம்: முதல் மூன்று படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்க கமிட்டானார் வெங்கட் பிரபு. அஜித்தின் படத்தை அதுவும் 50ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறாரா என்றே பலரும் ஆச்சரியத்துடன் அந்த சமயத்தில் கேள்வி எழுப்பி; படம் ஹிட்டாகிவிடுமா என்ற சந்தேகத்தையும் எழுப்பினர். ஆனால் யாரும் எதிர்பார்காதபடி படமானது மெகா ஹிட்டானது. குறிப்பாக கதையில் அவர் வைத்திருந்த ட்விஸ்ட் தியேட்டரில் அனைவரையுமே வாய் பிளக்க வைத்தது.
மாநாடு: மங்காத்தா படம் மெகா ஹிட்டான பிறகு சென்சேஷனல் இயக்குநராக மாறினார் வெங்கட் பிரபு. ஆனால் அதற்கடுத்து அவர் இயக்கிய படங்கள் தோல்வியையே சந்தித்தன. இப்படிப்பட்ட சூழலில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி தனது ஸ்க்ரீன்ப்ளேவில் மேஜிக் செய்ய படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதன் காரணமாக மீண்டும் முன்னணி இயக்குநர் வரிசையில் இணைந்தார் வெங்கட் பிரபு.
தளபதி 68: அவரது இயக்கத்தில் கடைசியாக கஸ்டடி படம் ரிலீஸானது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதற்கு வெங்கட் பிரபு கமிட்டாகியிருக்கிறார். படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அடுத்த ஷெட்யூலுக்காக தற்போது பாங்காக் சென்றிருக்கிறது படக்குழு.
வெங்கட் பிரபு பிறந்தநாள்: இந்நிலையில் வெங்கட் பிரபு இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். இந்த சூழலில் அவரது முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 10லிருந்து 30 கோடி ரூபாய்வரை சொத்துக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இவரது தந்தையும், தம்பியும் சினிமாவில் சம்பாதிப்பதால் அவர்கள் சொத்தையும் சேர்த்தால் இதைவிட அதிகம் போகும் என்றும் திரைத்துறையினரால் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











