Thalapathy 68 - தளபதி 68 பாடல் இதுவா.. விஜய்யும் பிரபுதேவாவும் வேற லெவல் டான்ஸாம்.. போக்கிரி பொங்கல் தயாரோ?
சென்னை: Thalapathy 68 Update (தளபதி 68 அப்டேட்) தளபதி 68 படத்தின் ஷூட்டிங்கில் என்ன பாடல் எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசு படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதால் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

அக்டோபர் ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் ட்ரெய்லர் கடந்த 5ஆம் தேதி வெளியாகி ஒருசேர விமர்சனத்தையும், வரவேற்பையும் சம்பாதித்திருக்கிறது. அதேசமயம் ஜெயிலர் ட்ரெய்லரின் சாதனையை லியோ ட்ரெய்லர் 24 மணி நேரத்துக்குள் அடித்து துவம்சம் செய்தது. படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியாகவிருக்கிறது.
தளபதி 68: இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார். அதன்படி படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்துக்கு எப்படி ஒரு மங்காத்தா படத்தை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு மெகா ஹிட்டாக கொடுப்பார் என தளபதி ரசிகர்கள் நம்புகின்றனர்.
மோகன் வில்லன்: இந்தச் சூழலில் படத்துக்கான பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி அமெரிக்காவுக்கு விஜய்யும், வெங்கட் பிரபுவும் சென்றனர். அங்கு டிஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜய்யின் உடல் ஸ்கேன் செய்யப்பட்டது. மேலும், இந்தப் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி 80ஸ் ஃபேவரைட் மோகன் வில்லனாக நடிக்கிறார் என்று பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன
பூஜை: இந்த சூழலில் படத்துக்கான பூஜை சமீபத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர்த்து வேறு யாரும் கலந்துகொள்ளவில்லை. பூஜையை முடித்த கையோடு படத்துக்கான பாடல் ஷூட் நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாவது ஷெட்யூலுக்காக வெளிநாடு செல்ல படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
என்ன பாடல்: இந்நிலையில் எடுக்கப்பட்ட பாடல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் பாடலுக்கு ராஜுசுந்தரம் நடனம் அமைக்க விஜய்யும், பிரபுதேவாவும் இணைந்து நடனம் ஆடியிருக்கிறார்களாம். ராஜுசுந்தரத்தின் அட்டகாச கோரியோ கிராஃபியில் இருவரும் போட்டிப்போட்டு நடனம் ஆடியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இந்தப் பாடல் நட்பை மையப்படுத்தி எழுதப்பட்ட பாடல் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் நிச்சயம் இந்தப் பாடல் போக்கிரி பொங்கல் போல் இருக்குமோ என்று உற்சாகத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.ஏற்கனவே விஜய்யும் பிரபுதேவாவும் போக்கிரி, வில்லு, ரவுடி ரத்தோர் ஆகிய படங்களின் பாடல்களில் நடனம் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











