Thangalaan Update - தங்கலான் டீசர் ரிலீஸ் எப்போது?.. பா.இரஞ்சித் வெளியிட்ட தரமான அப்டேட்

சென்னை: Thangalaan Update (தங்கலான் அப்டேட்) தங்கலான் படத்தின் டீசர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து பா.இரஞ்சித் அப்டேட் வெளியிட்டிருக்கிறார்.

 Here is the Details about Thangalaan Update

பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் இரஞ்சித் ஸ்டைலிலேயே இல்லை முகநூல் போஸ்ட்டுகளை பார்த்து கதை எழுதிவிட்டார்போல என இரஞ்சித்தை விமர்சிக்கவும் செய்தனர். குறிப்பாக துஷாரா விஜயன் ஏற்றிருந்த ரெனே கதாபாத்திரம் விமர்சனத்தை தாண்டி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தங்கலான் படத்தில் கமிட்டானார் இரஞ்சித்.

விக்ரம் நடிக்கும் தங்கலான்: தங்கலான் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் தயாரிக்கிறார். பெரிய வெற்றி ஒன்றுக்காக பல வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் விக்ரமுக்கு இந்தப் படம் நிச்சயம் அதனை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் சியானின் ரசிகர்கள்.

மிரட்டிய மேக்கிங் வீடியோ: விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் விக்ரம். நிச்சயம் இந்தப் படம் மூலம் அவரது வெற்றி ஏக்கம் தீர்ந்துபோகும் என ஆரூடம் கூறுகின்றனர். அதேபோல் தமிழ் சினிமாவின் உச்சக்கட்டமாக இந்தப் படம் அமையும் என்றும் அவர்கள் கணித்திருக்கின்றனர்.

ஷூட்டிங் ஓவர்: ஒகேனக்கல் பகுதியில் தொடங்கிய தங்கலான் ஷூட்டிங் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் மதுரையில் பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் நடந்தது. அதனையடுத்து படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.

 Here is the Details about Thangalaan Update

டீசர் ரிலீஸ்: தங்கலான் ஷூட்டிங் முடிந்ததைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விக்ரமும் டப்பிங் விரைவில் கொடுத்து முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தங்கலான் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தபோது தங்கலான் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "தங்கலான் படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும்" என்று குறிப்பிட்டார். இது விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X