Varisu - கேரளாவில் விஜய்யின் வாரிசு செய்த வசூல் இவ்வளவுதானா?.. இவங்களும் வடை சுட்டுருக்காங்களோ?..

சென்னை: Varisu (வாரிசு) கேரளாவில் வாரிசு படம் உண்மையாக எவ்வளவு வசூலித்தது என்பது குறித்த தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் வாரிசு படத்தில் நடித்தார். தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் பைலிங்குவலாக அந்தப் படம் உருவானது. படத்தை தெலுங்கில் ஃபேமஸ் தயாரிப்பாளரான தில்ராஜு தயாரித்தார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த அப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். கடந்த பொங்கலுக்கு படம் ரிலீஸானது.

Here is the Details about Varisu Movie Collection in Kerala

கலவையான விமர்சனங்கள்: தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தும் நோக்கத்தில்தான் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் பைலிங்குவல் படமாக வாரிசு படத்தில் நடித்தார் விஜய். எனவே அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும் என விஜய்யும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். இருந்தாலும் படம் பொதுவான ரசிகர்களிடம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை. குடும்ப செண்ட்டிமெண்ட் என்ற விஷயத்தை வம்சி தொட்டிருந்தாலும் படம் சீரியல்போல் இருந்ததாகவும், திரைக்கதை படு மோசமாக இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே கூறினர். இருந்தாலும் உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்ததாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விஜய் ரியாக்‌ஷன்: இருந்தாலும் வாரிசு ரிசல்ட் விஜய்க்கு கொஞ்சம் அப்செட்டை கொடுத்திருப்பதாகவே கூறப்பட்டது. அதுமட்டுமின்றி பீஸ்ட் திரைப்படம் தோல்வி படமாக அமைந்துவிட்டது. வாரிசு படமும் சுமார் படமாக அமைந்துவிட்டது. எனவே அடுத்த படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்ற தீவிர முனைப்போடுதான் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் விஜய் நடித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் யார் நம்பர் 1: இதற்கிடையே வாரிசு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தில்ராஜு, தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1. எனவே வாரிசு படத்துக்குத்தான் அதிகளவிலான திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திடம் கேட்கப்போவதாக தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேட்டி அந்த சமயத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது.

கேரளாவில் வாரிசு: இந்நிலையில் கேரள மாநிலத்தில் வாரிசு படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது மொத்தம் ஆறு கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக விநியோகஸ்தர் ஒருவர் கூறியிருக்கிறார். அதேசமயம் படம் வெளியானபோது கேரளாவில் 13 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்பட்டது. மொத்தம் 6 கோடி ரூபாய்தான் வசூலித்திருப்பதாக தற்போது தெரிய வந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் வாரிசு வசூலில் வடை சுட்டிருக்கிறார்களா என்று மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கூறிவருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X