Vidaamuyarchi - அட போங்கப்பா இதே வேலையா போச்சு.. விடாமுயற்சியால் அப்செட்டான ரசிகர்கள்?
சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி படம் குறித்து வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தகவலை பார்த்து அஜித் ரசிகர்கள் கவலையடைந்திருக்கின்றனர்.
துணிவு படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். படத்துக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வி சென்ட்டிமென்ட்படி இந்தப் படத்தின் பெயர் வைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் படம் ஹிட்டாகும் என்கின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமின்றி மகிழ் திருமேனியும் மிகச்சிறந்த இயக்குநர் என்பதால் நிச்சயம் ஒரு சூப்பர் ஹிட் படத்தை எதிர்பார்க்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

சுற்றுப்பயணம்: அஜித் தனது முதல்கட்ட வேர்ல்ட் டூரை அண்மையில் தொடங்கினார். நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் ரைட் செய்த அவர் சில மாதங்களுக்கு முன்பு பயணத்தை முடித்து சென்னை திரும்பினார். அதேபோல் அஜித் தனது அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதம் தொடங்குவார் எனவும் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். இதற்கிடையே அஜித் சென்னை திரும்பிவிட்டதால் விடாமுயற்சி பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
விடாமுயற்சியில் பிரச்னை: அதன்படி கடந்த மே மாதம் ஷூட்டிங் என கூறப்பட்டது. ஆனால் தொடங்கப்படவில்லை. இதனையடுத்து ஜூன் மாதம் என கூறப்பட்டது. லைகாவில் நடந்த அமலாக்கத் துறை சோதனை காரணமாக அஜித் லைகாவுக்கு பதில் வேறு ஒரு நிறுவனத்துக்கு விடாமுயற்சி படத்தில் நடிக்கலாம் என்ற யோசனையில் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை என திரைத்துறை வட்டாரம் கூறுகிறது.
திரும்பிய அஜித்குமார்: இதற்கிடையே அஜித்குமார் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார். அவர் தனது பயணத்தை முடித்துவிட்டு சில நாட்களுக்கு முன்னதாக சென்னை திரும்பினார். சிகப்பு கலர் டிஷர்ட்டில் கலக்கலாக வந்த அஜித்குமார் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
எப்போது ஷூட்டிங்?: இந்தச் சூழலில் விடாமுயற்சியில் இருந்த அத்தனை சிக்கல்களும் தீர்ந்துவிட்டதாகவும்; ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே இதில் த்ரிஷா நடிப்பதாக இருந்ததாகவும்; ஆனால் அவர் இப்போது விலகிவிட்டார் அவருக்கு பதிலாக தமன்னா நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.
ஷாக் தகவல்: இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அஜித் வெளிநாட்டிலிருந்து திரும்பியதால் ஷூட்டிங்கானது ஏற்கனவே வெளியான தகவலின்படி ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என கருதப்பட்டது. ஆனால் இப்போது வெளியாகியிருக்கும் தகவலின் அடிப்படையில் ஷூட்டிங் செப்டம்பர் மாதம்தான் தொடங்கும் என கூறப்படுகிறது. இது அஜித் ரசிகர்களை ரொம்பவே அப்செட்டாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











