Vidaamuyarchi - விடாமுயற்சி கதை இதுவா?.. ஒர்க் அவுட் ஆகுமா?. இணையத்தில் தீயாக பரவும் தகவல்

சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி கதை இதுதான் என்று தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்துக்கு பிறகு இப்போது அவர் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி இதுவரை இயக்கிய அத்தனை படங்களும் கவனம் ஈர்த்தவை என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

Here is the Details about Vidaamuyarchi Movie Story

நோ அப்டேட்: படத்திலிருந்து கடந்த மே ஒன்றாம் தேதிதான் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியானது. படத்தின் பெயர் விடாமுயற்சி என்று மட்டும் அறிவித்துவிட்டு அதற்கு பிறகு ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டுக்கு எப்படி காத்திருந்தார்களோ அதைவிட அதிகமாகவே விடாமுயற்சி அப்டேட்டுக்கு காத்திருக்கின்றனர்.

விறுவிறு ஷூட்டிங்: படக்குழு சார்பிலிருந்து அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வரவில்லையென்றாலும் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கியது. அதில் அஜித் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. மேலும் திரிஷா, ப்ரியா பவானி ஷங்கர், ஆரவ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அஜர்பைஜான்: முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு மீண்டும் இப்போது அஜர்பைஜானில் முகாமிட்டிருக்கிறது. இதற்கிடையே இப்படத்தில் அர்ஜுனும் இணைந்திருக்கிறார். தற்போது அஜர்பைஜானில் அஜித் - அர்ஜுன் - ஆரவ் காம்பினேஷன் காட்சிகளை மகிழ் திருமேனி எடுத்துவருவதாகவும் புதிய தகவல் ஒன்று கடந்த சில நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுதான் கதையா?: மேலும் அஜித்துடன் ஆரவ் இருக்கும் புகைப்படம் வெளியாகி ட்ரெண்டானது. அந்தப் புகைப்படத்தில் அஜித் படு ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் கதை குறித்து இணையத்தில் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. அதாவது அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவியாக நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் ஒரு விஷயத்துக்காக அஜர்பைஜான் செல்லும்போது அங்கு திரிஷா காணாமல் போகிறார். அதற்கான காரணம் என்ன திரிஷாவை அஜித் மீட்டாரா என்பதுதான் விடாமுயற்சியின் ஒன்லைன் என்று சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அய்யயோ இது பழைய காலத்து ஒன்லைன் ஆச்சே ஒர்க் அவுட் ஆகுமா என சந்தேகத்தை கிளப்பிவருகின்றனர். அதேசமயம் மகிழ் திருமேனி மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் வித்தியாசம் காட்டி அனைவரையும் ரசிக்கவைத்துவிடுவார் என்று ஏகே ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X