Vijay - வெங்கட் பிரபு கூட்டணியை உடைக்கும் விஜய்?.. ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ளயா?

சென்னை: Vijay (விஜய்) விஜய் - வெங்கட் பிரபு படம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே அதுகுறித்த புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். அனிருத் இசையமைப்பில் லலித் தயாரித்துவருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், மாத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடந்துவருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

Here is the details about Vijay - Venkat prabhu New Movie Updates

விஜய்யின் அடுத்த படம்: லியோ படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்தது. விஜய்யை அடுத்தது தெலுங்கு இயக்குநர் இயக்குவார் என்றும் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல் வெளியானது. ஆனால் சூப்பர் குட் பிலிம்ஸ் ஓகேதான் தெலுங்கு இயக்குநருடன் மீண்டும் தளபதி விஜய் இணைவதில் தங்களுக்கு உடன்பாடில்லை என ரசிகர்கள் கூறினர்.

வெங்கட் பிரபுவை டிக் செய்த விஜய்: இந்தச் சூழலில் கடந்த சில நாள்களாக கோலிவுட்டில் ஒரு ஹாட் டாபிக் ஓடிக்கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்று வெளியான தகவல் ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தின் கதையை கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் வெங்கட் பிரபு சொல்லிவிட்டதாகவும் அந்தக் கதையை இப்போது டிக் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Here is the details about Vijay - Venkat prabhu New Movie Updates

விஜய் சம்பளம் எவ்வளவு: இதனையடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்ட சூழலில் விஜய் அந்தப் படத்துக்காக 200 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்திதான், லியோவுக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார். அதே சம்பளத்தைத்தான் இந்தப் படத்துக்கும் அவர் பெறுவார் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அனிருத்தா யுவனா?: இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு அனிருத்தான் இசையமைக்க வேண்டும் என விஜய் விரும்புகிறாராம். தொடர்ச்சியாக அனிருத் விஜய்க்கு ஹிட்டுகளை கொடுப்பதால் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வெங்கட் பிரபுவின் முதல் படமான சென்னை 600028லிருந்து கடைசியாக ரிலீஸான கஸ்டடி படம்வரை யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைத்துவருகிறார்.

Here is the details about Vijay - Venkat prabhu New Movie Updates

பாடல்களும், பின்னணி இசையும் அவ்வளவு பிரமாதமாக அமைந்தும் இருக்கின்றன. எனவே யுவனை வெங்கட் பிரபு விட்டுக்கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் யுவன் இசையில் விஜய் கண்டிப்பாக ஒரு படம் செய்ய வேண்டும். வெங்கட் பிரபு - யுவன் கூட்டணியை உடைக்கக்கூடாது எனவும் தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X