Vijaykanth - ஒழுங்கா பணத்தை திருப்பி கொடுத்துடுங்க - விஜயகாந்த்தின் அதிரடி.. நிம்மதியான காமெடி நடிகர்

சென்னை: Vijayakanth (விஜயகாந்த்) நடிகர் போண்டா மணி திருமணத்தின்போது விஜயகாந்த் எடுத்த அதிரடி நடவடிக்கை குறித்து மீசை ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த், கமல் ஹாசன் அலை கோலிவுட்டில் பலமாக அடித்துக்கொண்டிருந்தபோது உள்ளே வந்தவர் விஜயகாந்த். எல்லோருக்கும் போல் எடுத்ததும் விஜயகாந்த்துக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட விஜயகாந்த் இனிக்கும் இளமை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். வில்லனாக அறிமுகமானாலும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்பதில் தீவிர முனைப்போடு இருந்தார்.

here is the details about Vijayakanth helps to actor bonda mani Marriage

தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முயன்று கொண்டிருந்தவருக்கு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவர் ஹீரோவாக நடித்த படம் எதுவும் ஓடவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தூரத்து இடி முழக்கம் படத்தில் ஹீரோவாக நடிக்க அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.

டாப் ஹீரோவான விஜயகாந்த்: தூரத்து இடி முழக்கம் கொடுத்த வெற்றியை தக்கவைத்துக்கொண்ட விஜயகாந்த் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ரஜினி, கமலின் கொடி உயர பறந்துகொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த விஜயகாந்த் அவர்களுக்கு இணையாக வளர்ந்தார். அவருக்கென்று இளைஞர்கள் ரசிகர்களாக மாறினர். மேலும் பல இயக்குநர்களுக்கு முதல் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பும் வழங்கினார். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சினிமா கல்லூரியில் இருந்து வந்த ஆபாவாணன், அரவிந்த்ராஜ். இவர்கள் இயக்கத்தில் ஊமை விழிகள் படத்தில் நடித்து படம் பெரும் ஹிட்டாக ஒரு காரணமாக இருந்தார்.

உதவிய விஜயகாந்த்: விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்த பிறகு தான் வளர்ந்துவிட்டோம் அதோடு போதும் என நினைக்கவில்லை. மாறாக தான் பட்ட கஷ்டத்தை வேறு யாரும் படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அவரைப்போலவே அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் இருந்தார். இருவரும் இணைந்துதான் சென்னைக்கு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த்: நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றிருந்தார். அந்த சமயத்தில் தென்னிந்திய நடிகர்கள் சங்கள் வாங்கிய கடனை அடைத்து வருவாயையும் அதிகரித்தார். அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பலருக்கு பல சமயங்களில் உதவியிருக்கிறார். ஹீரோவாக அறிமுகமாகி இப்போது குணசித்திர நடிகராக வலம் வரும் ஷ்யாமைக்கூட ஒரு பிரச்னையில் இருந்து காப்பாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது போண்டா மணிக்கு அவர் செய்திருக்கும் உதவி குறித்து தெரியவந்திருக்கிறது.

here is the details about Vijayakanth helps to actor bonda mani Marriage

நடிகர் சங்கத்தின் திருமண மண்டபம்: வடிவேலுவுடன் இணைந்து காமெடியில் கலக்கிய போண்டா மணி திருமணத்தை நடிகர் சங்கத்தின் திருமண மண்டபத்தில் வைக்கலாம் என எண்ணி மண்டப நிர்வாகியை அணுகினர். ஆனால், வேறு திருமணத்திற்காக அட்வான்ஸ் வாங்கிவிட்டதாக அவருக்கு பதில் கிடைத்திருக்கிறது. இதனால் என்ன செய்வதென்று யோசித்தவாறு இருந்தார் போண்டா மணி.

விஜயகாந்த் எடுத்த நடவடிக்கை: இந்தத் தகவலானது அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த்திற்குய் தெரியவந்தது. உடனடியாக மண்டப நிர்வாகியை தொடர்புகொண்ட விஜயகாந்த், நடிகர் சங்க திருமண மண்டபம் என்பது நடிகர்களுக்கானது. எனவே அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது. எனவே யாரிடம் அட்வான்ஸ் வாங்கினீர்களோ அவர்களிடம் அதை திருப்பி கொடுத்துவிட்டு போண்டா மணி திருமணத்தை நடத்துங்கள்" என கூறியிருக்கிறார். இந்தத் தகவலை நடிகர் மீசை ராஜேந்திரன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X