Vijay - விஜய்க்கு பிடித்த ஹீரோயின்கள் லிஸ்ட்.. அட இவங்களும் இருக்காங்களா?.. முழு விவரம் உள்ளே
சென்னை: Vijay's Favorite Actress(விஜய்க்கு பிடித்த நடிகைகள்) தளபதி விஜய்க்கு பிடித்த ஹீரோயின்கள் லிஸ்ட் குறித்து தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்யும் ஹீரோவாக உருமாறியிருக்கிறார் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு படங்களுமே அசால்ட்டாக நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்துவிட்டது. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தி விஜய்தான் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அவர்கள் அப்படி சொல்வதை ரஜினி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எனவே இரு தரப்புக்கும் மோதல் வலுத்திருக்கிறது.

லியோ: விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் விஜய்யுடன் நடித்திருக்கின்றனர். இன்னும் நான்கு நாட்களில் படம் ரிலீஸாகவிருக்கிறது. எனவே படத்துக்கான ப்ரீ புக்கிங்கும் தொடங்கி ஜோராக நடைபெற்றுவருகிறது. இதுவரை பல தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
சிறப்பு காட்சி: அதேபோல் லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி கிடைக்குமா என்று படக்குழு எதிர்பார்த்திருந்தது. அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தமிழ்நாடு சிறப்பு காட்சிக்கான அனுமதியை கொடுத்திருக்கிறது. ஆனால் அந்தக் காட்சி காலை 9 மணிக்குத்தான் திரையிட வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68: லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக தனது 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்தப் படமும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்துக்கான சம்பள பேச்சுவார்த்தை 175 கோடி ரூபாயிலிருந்துதான் தொடங்கியது என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. படத்தில் மீனாட்சி சௌதரி ஹீரோயினாக நடிப்பதாக கூறப்படுகிறது.

பிடித்த ஹீரோயின்கள்: இந்நிலையில் விஜய்க்கு பிடித்த ஹீரோயின்கள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அவருக்கு நதியா, ரேவதி, அமலா ஆகிய மூன்று பேரையும் ரொம்பவே பிடிக்குமாம். குறிப்பாக தன்னுடைய கல்லூரி காலத்தில் இவர்கள் மூன்று பேருக்கும் தீவிர ரசிகராக இருந்திருக்கிறாராம் விஜய். இதனை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











