லியோ சக்சஸ் மீட் ஓகே.. சக்சஸ் பார்ட்டி நடக்கும் இடம் இதுவா?.. விஜய்யின் பக்கா பிளான்?

சென்னை: Leo Success Party (லியோ சக்சஸ் பார்ட்டி) லியோ படத்தின் சக்சஸ் பார்ட்டி குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இதனால் லியோ விமர்சன ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய்யும், அவரது ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் விமர்சன ரீதியாக அடி வாங்கியிருக்கிறது. அதேசமயம் வசூலில் லியோ நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 560 கோடி ரூபாய் வசூலை தொட்டுவிட்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Here is the details about Vijays Leo Movie Success Party

விஜய் நடிப்பு சூப்பர்: படத்தின் கதையும், திரைக்கதையும் விமர்சனத்தை சந்தித்தாலும் விஜய்யின் நடிப்பை பலரும் கொண்டாடிவருகின்றனர். நடுத்தர வயது தந்தையாக விஜய் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திலிருந்து விஜய்யை கழித்துவிட்டால் ஒன்றுமே கிடையாது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுக்கேற்றபடிதான் விஜய்யின் நடிப்பும் இருந்தது.

சக்சஸ் மீட்: இந்நிலையில் லியோ படத்தின் சக்சஸ் மிட் சில நாட்களுக்கு முன்பு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டிருந்த சூழலில் சக்சஸ் மீட் நடத்தப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அவரது குட்டி ஸ்டோரியை எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விஜய்யும் ஒரு குட்டி ஸ்டோரியை சொன்னார்.

தளபதி 68: இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் தன்னுடைய 68ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதனை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மீனாட்சி சௌதரி, ஜெயராம், மைக் மோகன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

லியோ சக்சஸ் பார்ட்டி: படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கி நடந்து முடிந்தது. அடுத்ததாக பாங்காக்குக்கு படக்குழு சென்றிருக்கிறது. விஜய்யும் சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்றார். இந்நிலையில் லியோ படத்தின் சக்சஸ் பார்ட்டி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தற்போது பாங்காக்கில் இருக்கும் விஜய் விரைவில் லியோ படக்குழுவை அழைத்து அங்கே சக்சஸ் பார்ட்டி ஒன்றை வைப்பார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X