Vijay - யப்பா விஜய் இத்தனை தொழில் செய்கிறாரா?.. அதுவும் இந்த தொழில்தான் அவரது மெயின்

சென்னை: Vijay (விஜய்) நடிகர் விஜய் செய்யும் தொழில்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழின் டாப் 3 நடிகர்களில் ஒருவர் விஜய். அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. எனவே இறுதிக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் லியோ படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Here is the details about Vijays other business

விஜய் 68: லியோ படத்துக்கு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்காக அவருக்கு 175 கோடி ரூபாயிலிருந்து சம்பள பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அது உண்மையாகும்பட்சத்தில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்வார் விஜய்.

அரசியல் ஆசை: விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். அதன் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார். இதனால் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என பலர் கூறிவருகின்றனர். சமீபத்திய அவரது நடவடிக்கையும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது என்ற கருத்தும் பரவலாக எழ ஆரம்பித்திருக்கிறது. அண்மையில்கூட மாணவ, மாணவிகளை சந்தித்து ஊக்க தொகை கொடுத்து சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இரவு நேர பாடசாலை: அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விஜய் தனது அரசியலுக்கான விதையை விதைக்க ஆரம்பித்துவிட்டார் என அவரது ரசிகர்களும் முழுமூச்சாக வேலை செய்துவருகின்றனர். இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதுதான் விஜய் நடிக்கும் கடைசி படம். அதனையடுத்து மூன்று வருடங்கள் பிரேக் எடுத்து அரசியல் வருகைக்கான பணிகளை கவனிப்பார் எனவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது வதந்தி என உறுதியானது.

Here is the details about Vijays other business

விஜய் தொழில்கள்: விஜய் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் செலவு செய்யும் அளவு பணம் இருக்குமா என்ற ஒரு சந்தேகம் விஜய் ரசிகர்களிடமே இருக்கிறது. இந்நிலையில் சினிமா தவிர்த்து விஜய் செய்யும் தொழில்கள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, "ரியல் எஸ்டேட் தொழிலில் விஜய் அதிகமாக முதலீடு செய்திருக்கிறாராம். அதேபோல் பல அப்பார்ட்மெண்ட்டுகளை கட்டி வாடகைக்கும் விட்டிருக்கிறார். அதுபோக திருமண மண்டபங்களும் இருக்கின்றன.

முக்கியமாக, சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து சினிமாவிலேயே படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறாராம் விஜய். மேலும் ஷாப்பிங் மால்களை கட்டியும் வாடகைக்கு விட்டிருக்கிறாராம். மேற்கூறிய தொழில்களில் ரியல் எஸ்டேட் தொழிலில்தான் அதிக கவனம் செலுத்துகிறாராம் தளபதி. தற்போது இந்தத் தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X