Super Singer - சூப்பர் சிங்கர்.. யார் யாருக்கு என்னென்ன பரிசு தெரியுமா?.. உள்ளே முழு விவரம்

சென்னை: Super Singer Title Winner - சூப்பர் சிங்கர் ஒன்பதாவது சீசனில் அருணாவுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. அடுத்த இடம் பிடித்தவர்களுக்கு என்ன பரிசு வழங்கப்பட்டது என்ற விவரம் உள்ளே.

சின்னத்திரையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் விஜய் டிவியில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் ஆடிஷன் நடத்தி சிறப்பாக பாடுபவர்களை தேர்வு செய்து போட்டி நடத்தப்படும். இதுவரை எட்டு சீசன்கள் நடந்த சூழலில் ஒன்பதாவது சீசன் கடந்த சில மாதங்களாக நடந்தது. மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இறுதிப்போட்டி: 20 போட்டியாளர்களில் அபிஜித், பூஜா, அருணா, ப்ரியா, பிரசன்னா ஆகிய ஐந்து பேரும் இறுதிப்போட்டிக்கு தேர்வாகினர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஐந்து பேரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி பாடல்களை பாடினர். இதன் காரணமாக யாரை வெற்றியாளராக தேர்ந்தெடுப்பது என்று ரசிகர்களும், நடுவர்களும் குழம்பித்தான் போனார்கள்.

Here is the details about what prizes were awarded to the next runners-up in super singer 9

டைட்டில் வின்னர்: ஐந்து பேருமே சிறப்பாக பாடினாலும் அருணா ஒருபடி மேலே பாடியதால் அவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரசிகர்களின் வாக்குகள், நடுவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அருணா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதுவரை நடந்த எட்டு சீசன்களில் ஒரு பெண்கூட டைட்டிலை வென்றதில்லை. தற்போது அருணா வென்றிருப்பதன் மூலம் சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் அவர்.

பரிசு: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை பூர்வீகமாக கொண்ட அருணாவுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும், பத்து லட்சம் ரூபாய் ரொக்கமும் பரிசாக கொடுக்கப்பட்டது. மேலும் சூப்பர் சிங்கரில் வென்றால் திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் சூழல் இருப்பதால் அருணாவுக்கு நிச்சயம் திரைத்துறையின் கதவு திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டைட்டிலை வென்ற அருணாவுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

அடுத்தடுத்த இடங்கள்: அருணா டைட்டிலை வென்ற சூழலில் ப்ரியா ஜெர்சன் இரண்டாவது இடத்தையும், பிரசன்னா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே சமூக வலைதளங்களில் விருப்பத்துக்குரியவராக இருந்தவர் பூஜா வெங்கட்ராமன். நிச்சயம் பூஜா டைட்டிலை வெல்வார் இல்லை முதல் மூன்று இடங்களை பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு நான்காம் இடம் மட்டுமே கிடைத்தது.

என்னென்ன பரிசு: முதல் இடம் வென்ற அருணாவுக்கு வீடு பரிசாக வழங்கப்பட்டதைப்போல இரண்டாம் இடம் பெற்ற ப்ரியா ஜெர்சனுக்கு பத்து லட்சம் ரூபாய் ரொக்கமும், மூன்றாம் இடம் பிடித்த பிரசன்னாவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X