Vijay And Trisha Dating - விஜய்யும் த்ரிஷாவும் வெளிநாட்டில் டேட்டிங்?.. உண்மை என்ன தெரியுமா?

சென்னை: Vijay And Trisha Dating (விஜய் த்ரிஷா டேட்டிங்) விஜய்யும், த்ரிஷாவும் டேட்டிங் சென்றதாக வெளியான தகவல் குறித்து தற்போது உண்மை தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஃபேவரைட் ஜோடி என பெயர் எடுத்தவர்கள் விஜய்யும், த்ரிஷாவும். இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்தனர். இந்த நான்கு படங்களில் ஆதி, குருவியை தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. ஃப்ளாப்பான இரண்டு படங்களிலும்கூட இருவரது கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனதாகவும் ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவியது.

Here is the Fact about Vijay And Trisha Dating Rumour

குருவிக்கு பிறகு நோ: குருவி படம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியானது. அதற்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கவில்லை. அதேசமயம் விஜய்யும், த்ரிஷாவும் இணைந்து நடித்தபோது இரண்டு பேரையும் இணைத்து பல ஆண்டுகள் கிசுகிசுக்கப்பட்டன. அந்த கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் பல வருடங்களாக இரண்டு பேரும் இணைந்து நடிக்கவே இல்லை என்ற பேச்சும் கோலிவுட்டில் ஓடியது.

லியோவில் இணைந்த ஜோடி: சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் கமிட்டானார் விஜய். இதில் அவருக்கு ஜோடி யார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ப்ரைஸாக த்ரிஷா ஹீரோயினாக கமிட்டானார். இதனால் ஆண்டுகள் கழித்து திரையில் மீண்டும் தங்களது ஃபேவரைட் ஜோடியை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

டேட்டிங் சென்ற விஜய், த்ரிஷா?: லியோ படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் சமீபத்தில் முடிவடைந்தது. ஷூட்டிங்கை முடித்த விஜய் ஓய்வு எடுப்பதற்காக லண்டனில் இருக்கும் தனது மாமியார் வீட்டுக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் விஜய்யும், த்ரிஷாவும் வெளிநாட்டில் ஒரு ஷாப்பிங் மாலில் இருப்பதுபோல் புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் தீயாக பரவியது.

மீண்டு பற்றிய வதந்தி (தீ)?: அதனைப் பார்த்த பலரும் அவர்கள் இரண்டு பேரும் நார்வேயில் டேட்டிங் சென்றிருப்பதாக கொளுத்திப்போட்டனர். இதனையடுத்து பல ஆண்டுகள் கழித்து எண்ணெய் ஊற்றப்பட்டதால் மீண்டும் இருவர் பற்றிய வதந்தி வேகமாக பரவியது. இதற்கிடையே விஜய் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது என்றும் ஒரு தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

முற்றுப்புள்ளி: இந்நிலையில் விஜய்யும், த்ரிஷாவும் வெளிநாடுக்கு சென்றதாக பரவிய தகவல் குறித்த உண்மை நிலவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி தற்போது பரவிக்கொண்டிருக்கும் புகைப்படமானது லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது என்றும்; அந்தப் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த சமூக வலைதள கணக்கிடம் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் காப்பி ரைட்ஸ் உரிமை கோரியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்தப் புகைப்படமானது லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது உறுதியாகியிருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X