பிக்பாஸ் தமிழ் சீசன் 5... இறுதிப் போட்டியாளர்கள் பட்டியல் இதோ
சென்னை : அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 5 போட்டி இன்று மாலை 6 மணிக்கு துவங்க உள்ளது. அதே போல் அனைவரும் எதிர்த்த கன்ஃபார்ம் போட்டியாளர்கள் பட்டியலும் சோஷியல் மீடியாக்களில் வெளிவர துவங்கி விட்டன.
Recommended Video
நம்ப தகுந்த வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி 12 கன்ஃபார்ம் போட்டியாளர்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியல் இதோ,

1. கானா இசைவாணி (பாடகி)
2. ராஜு ஜெயமோகன் (சின்னத்திரை நடிகர்)
3. மதுமிதா (காஸ்ட்யூம் டிசைனர்)
4. அபிஷேக் ராஜா ( விமர்சகர்)
5. அக்ஷரா ரெட்டி (மாடல்)
6. நமிதா மாரிமுத்து (திருநங்கை)
7. ப்ரீத்தி சஞ்சீவ் (சின்னத்திரை நடிகை)
8. பிரியங்கா தேஷ்பாண்டே (விஜே)
9. நிழல்கள் ரவி (நடிகர்)
10. பவானி ரெட்டி (மாடல், சீரியல் நடிகை)
11. கோபிநாத் (மாடல்)
12. நிருப் நந்தகுமார் (நடிகர்)
இந்த பட பட்டியலை பார்த்து விட்டு பலரும் ஜிபி முத்து உள்ளிட்டோர் உள்ளே போறாங்களா, 18 போட்டியாளர்களும் இன்னைக்கே பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறாங்களா என பல விதங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். இதே போல், தனிமையில் இருக்க வேண்டிய போதிய காலத்தில் தனிமைப்படுத்தப்படாமல் பிரியங்கா எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் போக முடியும் என சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
இந்த சீசனுக்கான பிக்பாஸ் விதிகளின்படி போட்டியாளர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் நடந்த சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியை மா கா பா உடன் இணைந்து பிரியங்கா தான் தொகுத்து வழங்கினார். அப்படி இருக்கையில், பிரியங்கா எவ்வாறு போட்டியாளர் பட்டியலில் இடம்பெற முடியும் என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த பட்டியலுக்கு லைக்குகள் குவிவதுடன், பலர் ரீட்வீட்டும் செய்து வருகின்றனர். இதனால் எப்போது மாலை 6 மணியாகும், பிக்பாஸ் நிகழ்ச்சியை துவக்குவார்கள் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதோடு கமல் என்னவெல்லாம் பேச போகிறார் என்பதை பார்க்கவே தனிக்கூட்டம் காத்திருக்கிறது.
தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி, கமல் மீண்டும் சினிமாவில் தீவிரம் காட்டி நிலையில் துவங்கப்படும் சீசன் என்பதால் கமல் பேச்சுக்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கப்படுகிறது. இதற்கு முன் முதல் மற்றும் இரண்டாவது சீசனில் இந்தியன் 2 படம் பற்றிய அறிவிப்பு, தேர்தல் போட்டி தொடர்பான அறிவிப்பு உள்ளிட்ட அறிவிப்புக்களை கமல் வெளியிட்டார். அதனால் இந்த சீசனிலும் முக்கிய அறிவிப்பு எதையாவது வெளியிடுவாரா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











