Don't Miss!
- News
விக்ரம் + சர்தார் + பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்.. இத அப்டியே மிக்சில போட்டு அரைச்சா.. அட இது ‘பதான்’ல!
- Lifestyle
பெற்றோர்களே! உங்க குழந்தைக்கு இருமல் இருக்கா? அப்ப இந்த 3 பழங்களை அவங்களுக்கு கொடுக்கவே கூடாதாம்!
- Finance
குட்டி துபாய் ஆக மாறும் ஜிம்பாப்வே.. பணக்காரர்களுக்கு மட்டும் தனி இடம்..!
- Technology
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வெளியானது சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !
ரன்பீர் கபூர், சந்தீப் ரெட்டி வங்கா, பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, டி சீரிஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் "அனிமல்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தனது அறிமுக இயக்கத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை தந்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அப்படத்தின் இந்தி ரீமேக்கான "கபீர் சிங்" மூலம் பாலிவுட்டை அதிர வைத்தவர். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் படத்தை இயக்குகிறார். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு அனிமல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் மிரட்டலான ஆக்சன் அவதாரத்தில் ரன்பீர் கபூர் அசத்துகிறார். இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் மாறுபட்ட ஆக்ஷன் டிராமாவாக இப்படம் உருவாகிறது. ரன்பீர் முதன்முறையாக இப்படத்தில் தீவிரமான ஆக்ஷன் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட தலைமுடி மற்றும் அடர்த்தியான தாடியுடன், கூர்மையான கோடரியுடன் இருக்கும் ரன்பீரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படம் ரசிகர்களை மிரள வைக்கும் அழுத்தமான படைப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் மாறுபட்ட காம்பினேஷனில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படம் ஆகஸ்ட் 11, 2023 அன்று இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.