Maharaja - விஜய் சேதுபதியின் 50ஆவது படம் ஃபர்ஸ்ட் லுக்.. மகாராஜாவா வந்திருக்காரு.. மாஸ் ஹிட் கிடைக்குமா?

சென்னை: Maharaja First Look (மகாராஜா ஃபர்ஸ்ட் லுக்) விஜய் சேதுபதியின் 50ஆவது படமான மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழின் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்திருக்கும் விஜய் சேதுபதி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற டெம்ப்ளேட்டை உடைத்து வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. இதனால் அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகியிருக்கிறது.

Here is The First Look Of Vijay Sethupathis 50th Movie Maharaja

ஹீரோவாக சொதப்பல்: வில்லன் கதாபாத்திரங்களில் அவர் நடித்த படங்கள் மெகா ஹிட்டானாலும் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தோல்விகளையே சந்தித்துவருகின்றன. இதனால் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் சிறிது காலம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவரது ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

பாலிவுட்: இதற்கிடையே தமிழில் சிறந்த நடிகராக வலம் வந்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்திருக்கிறது. அதன்படி மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்திருக்கும் அவர் ராஜ் & டிகே இயக்கிய ஃபர்ஸி வெப் சீரிஸில் நடித்தார் ஹிந்தியை கற்றுக்கொண்டு தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசிய அவரை பார்த்து பாலிவுட் உலகம் கொஞ்சம் மிரண்டுதான் போனது. பாலிவுட்டில் அவரது நடிப்பில் கடைசியாக ஜவான் படம் வெளியானது. படத்தில் விஜய் சேதுபதி வயதான கெட்டப்பில் வந்து கலக்கியிருக்கிறார். அது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

மகாராஜா: இந்நிலையில் விஜய் சேதுபதி தமிழில் ஹீரோவாக நடிப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில் குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படம் விஜய் சேதுபதிக்கு 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு மகாராஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது.

அந்தப் போஸ்டரில் கையில் கத்தியுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க அமர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு பின்னணியில் காவல் துறையினர் நிற்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என கணித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து சமீபத்திய படங்கள் எதுவும் ஓடவில்லை. எனவே இந்தப் படம் அந்த நிலைமையை மாற்றும் என பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர் சேதுபதியின் ரசிகர்கள்.

மிஷ்கின் விஜய் சேதுபதி கூட்டணி: இதற்கிடையே மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அந்தப் படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பார் எனவும் கூறப்பட்டது. மிஷ்கின் இயக்கியிருக்கும் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்தபோது உருவான நட்பு இருவரும் இணைந்து பணியாற்றும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. அதற்கான பணிகளும் மும்முரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X